ஜப்பானின் பொருளாதரமாது ஏப்ரல் ஜூன் இடையிலான இரண்டாவது காலாண்டில், ஆண்டு வீதத்தில் 27.8வீதமாக குறைந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நுகர்வு மற்றும் வர்த்தகம் குறைந்ததே இதற்கு காரணமென அரசு வெளியிட்ட புள்ளி
விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாவது காலாண்டில் 7.8சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சரிவானது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள
மோசமான சரிவென ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் ஒப்பிட்டு பார்க்க கூடிய புள்ளி விபர தகவல்கள் 1980இலிருந்து தான் உள்ளன என அரசு தெரிவித்துள்ளது. அந்த
வகையில் முந்தைய மோசமான சரிவானது 200809இல் சர்வதேச நிதி நெருக்கடியின் போது ஏற்பட்டது.
பொருளாதார வலிமையில் உலகின் மூன்றாவது பெரிய நாடான ஜப்பானின் பொருளாதாரம், கடந்த ஆண்டு இறுதியில்
கொரோனா நோய்த்தொற்று பரவ தொடங்கிய போதே மோசமாக தான் இருந்தது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் சமூக
இடைவெளி கட்டுப்பாடுகளால் இச்சரிவு படிப்படியாக மோசமடைந்தது.
ஏப்ரல்ஜூன் காலகட்டத்தில் ஜப்பானின் ஏற்றுமதியானது ஆண்டு வீதத்தில் 56சதவீதம் குறைந்தது. அதேவேளையில் தனியார் நுகர்வானது ஆண்டு வீதத்தில் சுமார் 29சதவீதம் குறைந்தது.
ஜப்பானில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வணிக நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படவில்லை. இதனால் கடந்த மாதம் நோய்த்தொற்று அதிகரித்து மொத்த தொற்று எண்ணிக்கை 56 ஆயிரமாக அதிகரித்தது. இந் நிலையில் நோய்த்தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதாரம் படிப்படியாக மீளுமென எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.