நாட்டில் இதுவரையில் 10,579,220 பேருக்கு இரு கட்டங்களாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதே போன்று 13,497,826 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 1,438,065 பேருக்கும் முதற்கட்டமாகவும், 8,92,185 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதே போன்று 10 697 335 பேருக்கு முதற்கட்டமாகவும், 8,647,025 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
1,59,089 பேருக்கு முதற்கட்டமாகவும், 43,450 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதே போன்று 4,48,382 பேருக்கு முதற்கட்டமாகவும், 2,40,569 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
7,72,955 பேருக்கு முதற்கட்டமாகவும், 7,55,991 இரண்டாம் கட்டமாகவும் மொரட்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு;ளளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
-வீரகேசரி-
(எம்.மனோசித்ரா)