மரக்கறி எண்ணெய் என்ற போர்வையில் சந்தையில் விற்கப்படும் பாம் எண்ணெய்யால், இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிரிமல் பிரேமகுமார எச்சரித்துள்ளார்.
அத்தகைய எண்ணெயின் பல மாதிரிகள் மனித உடலுக்கு ஆரோக்கியமற்ற கூறுகளைக் கொண்டிருப்பதை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட சோதனைகளில், கண்டறியப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் இந்த நிறுவனத்திடம் இல்லை என்பதால், நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
மரக்கறி எண்ணெய்யாக விற்கப்படும் இத்தகைய எண்ணெய்களில் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்பு அமில அளவு உள்ளது, இது இயற்கை பாமாயில் இல்லை என்றார்.
எனவே, ‘மரக்கறி எண்ணெய்’ என விற்கப்படும் எண்ணெய்கள் உண்மையில் வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவை சுத்திகரிக்கப்படுவதற்கு முன்பு, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, பல்வேறு வகையில் விற்கப்படுவதாக டாக்டர் சிரிமல் பிரேமகுமார கூறினார்.