காத்தான்குடியை சேர்ந்தவரே தாக்குதலை மேற்கொண்டவர் 

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி – 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

May be an image of 1 person and standing

கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 7 வயதில் வெளிநாடு சென்றுள்ளார்.

இவர் கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார். என்பது தெரியவந்துள்ளது.

May be an image of 5 people and people standing

ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில், ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில்  வசிக்கின்றனர்.

குறித்த நபர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன தொடர்புடையவர் என்று நியூசிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம் -வீரகேசரி- Link

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter