கட்டுநாயக்க விமான நிலையத்தை, திறக்க நடவடிக்கை – குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரம் அனுமதி

தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக Daily Mirror ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் முதல் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தவிர்த்து கொரோனா அச்சுறுத்தல் இல்லாத நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

எனினும் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் திகதி குறித்து இன்னமும் அரசாங்கம் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

விமான நிலையத்தை மீண்டும் திறப்பது மற்றும் எந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பது என்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter