இன்று ஜும்ஆ இல்லை என்றாலும், இந்த நாளின் மகிமைகள் என்ன?

அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து விதமான ஒன்றுகூடல்களையும் தடை செய்துள்ளது அந்த அடிப்படையில் தற்காலிகமாக முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுக்க முடியாத ஜமாஅத் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையையும் நிர்பந்த அடிப்படையில் நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாகும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அதிகம் அல்லாஹ்வை நெருங்க முயற்றிசிக்க வேண்டுமே ஒழிய மறுமையை மறந்து செயல்படக்கூடாது

அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!
நிர்பந்த அடிப்படையில் தடைபட்டது ஜும்ஆவுடைய ஒன்றுகூடலும் தெழுகையும் மட்டும் தானே ஒழிய அத்தினத்தின் சிறப்புக்கள் அல்ல என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

ஜும்ஆவுடைய தினத்தின் சிறப்புக்களும் அதில் நாம் செய்ய வேண்டியவைகளும்

1) ஜும்ஆ தினத்தின் சிறப்புக்கள்

¶நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு கிடைத்த தனிச்சிறப்பு,

عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللهُ بِنَا فَهَدَانَا اللهُ لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ، وَالسَّبْتَ، وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ، نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا، وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ» صحيح مسلم

நபி (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்தவர்களை ஜும்ஆ தினத்தை விட்டும் பாக்கியமிழக்கச் செய்துவிட்டான், யூதர்களுக்கு சனிக்கிழமையும், நஸாராக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இருந்தன. அல்லாஹ் எங்களை அனுப்பி வெள்ளிக்கிழமையைத் தந்தான்.எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிவிட்டது. இதுபோன்றே மறுமையிலும் அவர்கள் எங்களைத் துயர்பவர்களே, உலகில் நாம் கடைசியில் வந்தவர்கள், மறுமையில் முதன்மையானவர்கள், ஏனைய படைப்புகளுக்கு முன்னால் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும். (முஸ்லிம்)

¶ நாட்களில் சிறந்த நாள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 1548.
அத்தியாயம் : 7. ஜும்ஆ

2)ஜும்ஆத் தினத்தில் நபிகளார் சுபஹுத் தொழுகையில் ஓதியவை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.
ஸஹீஹ் புகாரி : 891.
அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை

¶ பள்ளியில் இமாமுக்கு பின்னால் தொழுது பலகிய பலருக்கும் இந்த அத்தியாயங்கள் மனனமில்லாதிருக்கும் இப்போது கிடைத்துள்ள ஓய்வுகாலத்தை பயன்படுத்தி அவற்றை மனனமிட்டுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

3) நபிகளாரின் மீது அதிகம் ஸலவாத் சொல்லுதல்

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، …… فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ…….» سنن أبي داود

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும், எனவே அதில் என் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள், உங்களது ஸலாத் எனக்கு எடுத்துக்காட்டப்படும்.”
(அபூ தாவுத்:1047, நசாஇ…)

அன்றைய தினத்துக்காக குளித்தல். இது மிகவு வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமாகும், இதில் பொடுபோக்கு செய்யக்கூடாது.

¶ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 687.
அத்தியாயம் : 4. தொழுகை

¶ ஸலவாத் சொல்ல வேண்டிய முறை

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ “.

புஹாரி 3370

4) ஜும்ஆ நாளில் குளித்தல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 897.
அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை

¶ ஜும்ஆவுடைய தொழுகை தொழுகை எம்மீது கடமையில்லை என்ற போலும் சுத்தத்தை பேணிக்கொள்ள நாம் குளிக்க வேண்டும்.

5) துஆக்கள் அங்கிகரிக்கப்படும் நேரம்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு’ என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுது அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி : 935.
அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை

¶ அது எந்த நேரம் என்பது தொடர்பில் பல கருத்துக்கள் கூறப்படுகின்றது அவை அனைத்தும் ஆதாரமற்றவை எனவே அந்நாள் முழுவதிலும் அதிகமாக பிரார்த்தனைகளில் நாம் ஈடுபட வேண்டும்.

¶ இப்போது எங்களுக்கு ஏற்படுள்ள மிகப்பெறும் சோதனையால் இன்று வரை நோய்வாய் பட்டுள்ளவர்களின் ஆரோக்கியத்துக்கும் இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து எம்மையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாக்குமாறும் அதிகமாக வெள்ளிக்கிழமை தினத்தில் ரஹ்மானிடம் நாம் பிரார்திப்போம் துஆக்கள் அங்கிகரிக்கப்படும் அந்த நேரத்தில் எமது பிரார்த்தனை நேற்பட்டு விட்டால் நிச்சியமாக நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான நிம்மதியான வாழ்கை எமக்கு மீண்டும் கிடைத்து விடும்.

6) வெள்ளிக் கிழமை செய்யக் கூடாதவை

¶ஜும்ஆவுடைய இரவையில் விசேட வணக்கங்களில் ஈடுபட தடை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ، إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ» صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஜும்ஆவுடைய இரவை ஏனைய இரவுகளிலிருந்து வித்தியாசமான வணக்கத்தின் மூலம் குறிப்பாக்க வேண்டாம், மேலும் ஏனைய தினங்களிலிருந்து ஜும்ஆ தினத்தில் மாத்திரம் நோன்பையும் குறிப்பாக்க வேண்டாம், உங்களில் ஒருவர் தொடர்ந்து பிடிக்கும் நோன்பாக இருந்தாலே தவிர.” (தொடர்ந்து பிடித்தால் பிடிக்க முடியும்)

(முஸ்லிம்)

¶ வெள்ளி நோன்பு பிடிப்பதாக இருந்தால் அதற்கு முந்திய நளுடனோ பிந்திய நளுடனோ சேர்த்து பிடிக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ، إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ» صحيح البخاري

நபி (ஸல்) கூறினார்கள்: “ஜும்ஆ தினத்தில் உங்களில் எவறும் நோன்பு பிடிக்க வேண்டாம், அதற்கு முந்திய நாளில் அல்லது பிந்திய நாளில் பிடித்தாலே தவிர.”

(புஹாரி:1985, )

¶ ஜும்ஆவுக்காக அதான் சொல்லப்பட்டால் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ } [الجمعة: 9]
ஜும்ஆ தினத்தில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த விறைந்து வாருங்கள், மேலும் வியாபாரத்தை விட்டுவிடுங்கள்
(அல் ஜும்ஆ: 9)

¶ ஜும்ஆவுடைய அதான் கூறப்பட்ட பின்னர் உள்ளூரில் இருப்போர் வியாபாரத்தில் ஈடுபடுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான் ஜும்ஆ கடமையில்லாத பிரயாணிகள் மீதும் நோயாளிகள் மீதும் நிர்பந்த சூழலில் உள்ளோர் மீதும் அது குற்றமில்லை அவர்களின் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

¶ உள்ளூரில் இருக்கும் நாம் பரவக்கூடிய Covid19 என்ற வைரஸின் அச்சத்தால் நாட்டு மக்களின் பாதுகாப்புக் கருதி அரசு எடுத்திருக்கும் முடிவகளுக்கு அமைய நிர்பந்த சூழ்நிலை காரணமாகவே ஜும்ஆ தொழுகையை கைவிட்டுள்ளோம் இந்த காலகட்டத்தில் ஜும்ஆவை விட நாம் சலுகையளிக்கப்பட்டுள்ளோம். எனவே எமது தேவைகளுக்கு ஏற்ப்ப வியாபார நடவடிக்கை களை மேற்கொள்வதில் தடையில்லை.

¶ சோதனை நிறைந்த இந்தக்காலத்தில் குடும்பம் சகிதம் லுஹருடைய நேரத்தை தொழுவதிலும், குர்ஆன் ஓதுவதிலும், ஸலவாத்து சொல்வதிலும், துஆ கேட்பதிலும் களிப்பது விரும்பத்தக்க காரியமாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

குறிப்பு:
ஜும்ஆ உரை மற்றும் ஜும்ஆ தொழுகையுடன் தொடர்புபட்ட சட்டதிட்டங்கள் எதையும் இங்கே நான் பதிவு செய்ய வில்லை இன்றைய காலத்துக்கு தேவையான சட்டங்களுன் இவ்வாக்கம் சுருக்கப்பட்டுள்ளது.

Check Also

நியூசிலாந்தின் மவ்ரி முஸ்லிம்கள் (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்)

உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ், …

Free Visitor Counters Flag Counter