கொவிட்-19 நோய்க்கு எதிரான பைசர் அல்லது அஸ்ட்ரா செனெக்கா தடுப்புமருந்துகளின் ஆற்றல்
6 மாதங்களில் குறைந்துவிடுவதாக பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக மூன்றாவது முறை கூடுதல் தடுப்பூசிகளைப் போட வேண்டியதன் அவசியத்தைக் கண்டுபிடிப்புகள் வலியுறுத்துகின்றன.
1.2 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனை முடிவுகள் ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. 5 முதல் 6 மாதங்களில், பைசர் தடுப்பூசியின் ஆற்றல்
88 வீதத்தில் இருந்து 74 வீதத்திற்கு குறைந்திருந்தது. அஸ்ட்ரா செெனக்க தடுப்பு மருந்தின் ஆற்றல் 4 முதல் 5 மாதங்களில், 77 வீதத்தில் இருந்து 67 வீதத்திற்கு குறைந்தது.
முன்னதாக, குறைந்தது 6 மாதங்களுக்கு வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் நீடிக்கும் என்று கூறப்பட்டது.
ஒரு பக்கம் கொரோனா தொற்று புதிய பரிமாணங்களை எடுத்து வந்தாலும், மக்கள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படாமலும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பது போன்ற விடயங்களில் கொரோனா தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. – தினகரன் –