இலங்கையில் பஞ்சத்துக்கான முதல் படி

இலங்கையில் பல தசாப்தங்களுக்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகம் நிலவுகின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இன்று வாழ்கின்றோம். பஞ்சத்தை பார்த்திராத எம்மை இது பஞ்சத்துக்கான முதல் படி என்று உணர வைத்துள்ளது இன்றைய நிலை.

ஒரு புறம் விலையேற்றம் மறுபுறம் பல பொருட்கள் தட்டுப்பாடு என்பதோடு பல பொருட்களை கண்களால் பார்ப்பது கூட கடினமாகிவிட்டது.

உதாரணமாக 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களால் பயன்படுத் தப்பட்டு வந்த தமிழர்களின் மங்கள பொருள். காலம் காலமாக எமது கலை கலாசாரங்களோடு பின்னிப்பிணைந்து பிறப்புத்தொட்டு இறப்பு வரை நம் கூடவே மஞ்சல் இன்று நமக்கு கிடைக்கிறதா, என்றால் இல்லை உணவுகளில் மஞ்சல் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மஞ்சள் இலங்கையில் ஒரு தனிப்பயிராகவும் மற்றும் தென்னையுடன் இடைநிலைப் பயிராகவும் ஈரவலயத்திலும் இடைவெப்ப வலயத்திலும் பயிர்ச் செய்யப்படுகின்றது. குருணாகலை, கம்பஹா, களுத்துரை, கண்டி, மாத்தளை, மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிரதானமாக வளர்க்கப்படுகிறது. உள்நாட்டில் வளர்க்கப்படுகின்ற இனவகையில் பல இருந்த போதிலும் அவை விஷேடமாக இனம் காணப்படவில்லை இறக்குமதி செய்யப்படும் இன வகைகள் பல காணப்படுகின்றன. பொங்கல் போன்ற பண்டிகைகள் தொட்டு அன்றாட உணவு என்று எதற்கும் மஞ்சல் கிடைப்பதில்லை. எத்தனை கடைகள் ஏறி இறங்கினாலும் இல்லை என்பதே பதில்

தாலி கயிறுக்கு உரசி பூசுவதற்கு கூட இன்று மஞ்சல் நாட்டில் நமக்கு கிடைப்பதில்லை. அடுத்தது பாசி பயறு விலை. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 1000 ரூபா.. இந்த விலையில் பாசிப்பயறு வாங்கும் வாய்ப்பு எல்லோருக்கும் இல்லாமையால். இன்று பண்டிகையில் கூட பயறு பாவிக்காமலேயே பலகாரங்கள் செய்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் நமது அன்றாட பாவணையான பால்மா தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நாட்டில் மொத்த வியாபார நிலையங்கள் , பல் பொருள் அங்காடிகள் மற்றும் சிறிய கடைகள் – உட்பட எல்லா கடைகளிலும் முழு ஆடைப் பால் மா வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேநீர் அருந்துவதற்கு நாம் பயன்படுத்தும் பால்மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட வில்லை என்று அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் கூறினர். ஆனால் சராசரி மனிதராக நாம் பால்மாவை தேடி தெருதெருவாக கடைகளில் அலைமோதினோம். ஆனாலும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் விற்பனை ஆகாத இன்னொரு பால்மாவை வாங்கினால் நாம் கேட்கும் பால்மாவை தர முடியும் என கடைக்காரர் கூறுகின்றார். இதனால் 400 ரூபாவுக்கு வாங்க வேண்டிய பால் மாவுக்கு நாம் ஆயிரம் ரூபாவை செலவிட வேண்டி ஏற்படுகின்றது.

அடுத்து நாடு முழுவதிலும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக விற்பனை முகவர்களும், மக்களும் தெரிவிக்கின்றனர். மஞ்சள் நிறத்திலான லாப்ஸ் சிலிண்டர்களை வைத்திருந்தவர்கள் எல்லோரும் இன்று விழி பிதுங்கி நிற்கிறோம். எங்கு தேடினும் இல்லை. இறக்குமதியை நிறுத்தி விட்டதாக கூறப்பட்டது. நீல நிறமுடைய லிட்டோ சிலிண்டர்களும் போதியளவு வாங்குவதற்கு இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் நாட்டின் பல இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

தட்டுப்பாடு நிலவும் பொருட்களை தொடர்ச்சியாக நுகர்வோர் பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் அமைச்சர்கள் தெரிவித்தனர். சமையல் எரிவாயு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதுடன், பால்மா நிறுவனங்கள் இறக்குமதிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதுவுமே சீர் செய்யப்படவில்லை. மக்கள் பொருட்களை தேடி தெருதெருவாக அழைந்துக்கொண்டிருந்த போது 60 வகையான மருந்துப் பொருட்களுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. சுகாதார அமைச்சரால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டது. குறித்த வர்த்தமானி அறிவிப்பில், 38 வகை கண் வில் .லைகள், இரத்த குளுகோஸ் அளவீடுமானி, இரத்த குளுகோஸ் அளவீடுமானிக்கான சோதனைக் கீற்றுகள் மற்றும் இருதய சிகிச்சைகளுக்கான இரு வகை ஸ்டென்ட் (Stent) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் உரதட்டுபாடு நிலவுவதாக தொடர்ந்து விவசாயிகள் குரல் எழுப்பிவருகின்றனர்.

விவசாயம் பாதிக்கப்பட்டால் பஞ்சம் பட்டினி என்பதனை தவிர்க்க முடியாத நிலைபடும். இந்நிலையில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இன்னும் 10 11 நாட்களுக்கான பெற்றோல், டீசல் கையிருப்பே உள்ளதாக கருத்தை அதிகாரி ஒருவர் வெளியிட்டார். இது மக்களை மேலும் அச்சப்படுத்திய நிலையில் அவர் பொய் கூறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர் கைதாகியுள்ளார்.

இவ்வாறு பல பிரச்சினைகளில் நாட்டு மக்கள் சிக்கி திணறும் போது கொரோனா மறுப்புறம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. ஆம் இலங்கையில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து செல்கிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலுக்கு வந்துவிட்டது. ஆயினும் எதிர்காலத்தில் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எது எப்படியோ, மிக இக்கட்டான இன்றைய காலப்பகுதியில் எத்தனை வீட்டில் உணவு சமைப்பதற்கு அடுப்பு எரிந்துக்கொண்டிருக்கிறது, என்பதே கேள்விக்குறி. இந்த அபாயகர நிலை தொடர்ந்தால் நாம் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டிவரும், என்பது மட்டும் உண்மை. (வீரகேசரி – 23-8-21) குமார் சுகுணா

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter