லாப் கேஸ் விலை அதிகரிப்புக்கு நிகராக லிட்ராே கேஸ் விலையை அதிகரிக்குமாறு லிட்ராே கேஸ் நிறுவனம் கோரி இருக்கின்றது.
அதன் பிரகாரம் விரைவில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளவேண்டி வரும். இல்லாவிட்டால் வழக்கு விசாரணைக்கு செல்லவேண்டிவரும் என நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்தார்.
லிட்ராே காஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கேஸ் விநியோகம் தனி உரிமை சந்தைப்பங்கைக்கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கிடையில் இருப்பதால், ஒரு நிறுவனத்துக்கு கேஸ் விலையை அதிகரிப்பதற்கு அனுமதித்தால், மற்ற நிறுவனத்துக்கு அந்த வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை கடமைப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் லாப் காஸ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே காஸ் 12.5கிலாே கிராம் சிலிண்டர் 363 ரூபாவினாலும் 5 கிலாே கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு இருக்கின்றோம். இன்னும் சில தினங்களில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்றார். -வீரகேசரி- எம்.ஆர்.எம்.வசீம்