சில நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் சுயமாகவே மூடப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும் கிடையாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டமையை, தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் சாதாரண மக்களை பாதிக்காத வகையில், முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல்வேறு பகுதிகளில் சிறு வியாபார நடவடிக்கைகளின் ஊடாக, வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் மக்கள் குறித்தும், சிந்தித்து செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி இதன்போது குறிப்பிட்டார்.
இதனால், மக்களை சிரமத்திற்கு உட்படுத்தாது, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இராணுவ தளபதி வர்த்தகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
-தமிழன்.lk-