நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லா விட்டாலும் சிங்கள பௌத்த மக்களுக்கான தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.
கொழும்பில் இன்று -14- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உரிமை இன்று நாட்டில் ஒரு முக்கிய தலைப்பாகிவிட்டது.
இந்த பிரச்சினையின் தன்மை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த பல்வேறு கட்சிகள் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றன.
சிங்கள பௌத்தம் மற்றும் ஜனநாயகத்தில் பிரச்சினை இருக்கும் போது, அதை தீர்க்க ஒரு வழிமுறை வேண்டும்.
அதில் எதையும் எடுத்துக் கொள்ளாமல், சில கட்சிகள் தேசிய பட்டியல் பிரச்சினையை ஒரு பெரிய நெருக்கடியாக மாற்றிவிட்டன.
இந்த தேசிய பட்டியலில் நமக்குத் தேவையான ஒரே விஷயம், இஸ்லாமிய தீவிரவாதத்தின் தோல்வி தொடர்பான சட்டங்களையும் விதிகளையும் நிறைவேற்றக்கூடிய எங்களுடைய பிரதிநிதித்துவத்தை வழங்குவதாகும்.
இந்த உறுப்பினர் பதவியை இழந்த போதிலும், நாளை முதல் எங்கள் திட்டத்தை தொடருவோம்.
எனக்கு தேசிய பட்டியலில் இடம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு விஷயம் அல்ல. நாங்கள் அதை வைத்து வேலை செய்தவர்கள் அல்ல.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் நீதிமன்றம் செல்வதில்லை. நாங்கள் மக்கள் நீதிமன்றத்திற்குச் சென்று மக்களுக்கு உண்மையைச் சொல்கிறோம். இந்த இடத்தில் இரண்டாவது ஆட்டத்தை தொடங்குவோம் என்றார்.