விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி அறவீட்டின் அடிப்படையில் ஒரு சில வர்த்தகப் பொருட்கள் மீதான வரிகளில் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய (இவ்வருடம்) ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் இக்கட்டளை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின்படி, விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி (ஒரு கிலோ கிராமிற்கு)
- நெத்தலி உள்ளிட்ட உலர்த்திய கருவாடுகளுக்கு ரூ. 100
- வெந்தயத்திற்கு, ரூ. 50 ரூபாய்.
- குரக்கன் மாவுக்கு ரூ. 150
- கடுகு விதைகளுக்கு ரூ. 62
- வெண்ணெய், பால் சார்ந்த பொருட்களுக்கு ரூ. 880