நாட்டில் வாகனங்களின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்தமையே, குறித்த வாகனங்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகும்.
தற்போது பாவனையில் உள்ள கார்களின் விலை 100 வீதம் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
2019ஆம் ஆண்டு வெளியான ப்ரீமியோ வாகனம் இதுவரையில் 2 கோடிக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதே வருடத்தில் வெளிவந்த எக்ஸியோ கார் 12 மில்லியனைக் கடந்துள்ளதோடு, 15 வருட பழமையான எக்ஸியோ கார் 65 இலட்சமாக அதிகரித்துள்ளது.
5 வருட பழமையான “விட்ஸ்” கார் 90 இலட்சமாக உயர்ந்துள்ளது.
3 வருடம் பழமையான “வெகன்ஆர்” 65 இலட்சத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 3 அல்லது 4 வருடங்கள் பழமையான முச்சக்கரவண்டிகளின் விலை 16 முதல் 17 இலட்சமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் சராசரி விலை 4 இலட்சமாகவும், ஸ்கூட்டரின் விலை அதைவிடவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -தமிழன்.lk-