கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, களுத்துறை மாவட்டத்தில் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை ஆகிய பகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன.
எவரும் இந்த பகுதிகளுக்குள் உட்பிரவேசிப்பதோ அல்லது வெளியேறுவதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுராதபுர காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கெகிராவ மற்றும் கனேவல்பொல நகரங்களின் வணிக வளாகங்களை முழுமையாக மூடுவதற்கு கெகிராவ காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹொரவ்பொத்தானை உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் தொடர்ந்தும் பூட்டப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நகரசபை ஆகிய இணைந்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் மக்கள் நெரிசல் அதிகம் காணப்பட்டதால் சுகாதார நலன் பாதிப்படைந்தமையை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.