தனிமைப்படுத்தல் மீறினால் – சட்டமும் தண்டனையும்

தனிமைப்படுத்தல் அறிவுரைகளிற்கு முரணாக செயற்பட்டால் அதன் பின்விளைவுகள் என்ன?

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடை செய்தல் கட்டளை சட்டத்திற்கு கீழ் அமையும் விடயங்கள்

  • நீங்கள் தனிமைப்படுதல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட முடியும்.
  • உங்கள் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட முடியும்.
  • மற்றவரிகளிடமிருந்து விலக்கிட அல்லது சிகிச்சைக்காக பலவந்தமாக அனுப்பப்பட முடியும்.
  • அதற்கு உடன்படாவிடின் பிடியாணையின்றி கைது செய்யப்படவும் வழக்கு தொடரப்படவும் முடியும்.
  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் 06 மாதம் வரை சிறை தண்டனையும் அல்லது ரூபா. 2000 தொடக்கம் ரூபா. 10,000 வரையான அபராதமும் விதிக்கப்பட முடியும்.

இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழான குற்றமாகும்.

  • கவனயீனமாக அல்லது வேண்டுமென்று நோய் பரவுவதற்கு இடமளித்தல் அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பின்பற்ற தவறல் என்ற அடிப்படையில் குற்றமாகும்.
  • இது பிடியாணையின்றி கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய குற்றமாகும்.
  • இதற்கு 06 மாதம் தொடக்கம் 02 வருடம் வரை சிறை தண்டனையுடன் ரூபா. 1500 அபராதத்திற்கு உட்படுத்த முடியுமான குற்றமாகும்.

தவறொன்றிற்கு ஒத்தாசை வழங்குதல் குற்றமாகும்.

  • மேற்படி குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் அல்லது உதவி புரியும் நபர்களை பிடியாணையின்றி கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட முடியும்.
  • மேற்படி குற்றத்திற்காக தண்டனைக்குட்படுத்தப்பட முடியும்.
  • மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்கு பயன்படுத்திய அசையும், அசையா சொத்துக்கள் தடை செய்யப்படும்.

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter