அக்குறணையில் ஒருவர் கொரொன வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்கின்ற விடயத்தில் பிரதேச வாழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அக்குறணையைப் பொறுத் வரையிலும் அது மிகப் பிரபல்யமான ஊர். அப்பிரதேச முஸ்லிம் மக்கள் வர்த்தகத் துறையில் தேசிய ரீதியாகவும் பல்வேறு சர்வதேச நாடுகளுகுச் சென்று வருபர்களும் அந்நாடுகளுடன் தொடர்புடையவர்கள் உள்ள பிரதேசமாகும். எவ்வாறாயினும் இது தொடர்பில் மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை. சுகாதாரம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் அக்குறணை முஸ்லிம் மக்கள் மிகுந்த அதாவனத்துடன் நடக்க வேண்டும் என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
அக்குறணை கொரொனா தொற்று அடையாளம் காணப்பட்டவர் நபர் தொடர்பில் கண்டி தேசிய வைத்தியாசாலையின் அத்தியட்சகர் வைத்திய அதிகாரி ஆர். எம். எஸ். கே. ரத்நாயகவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கொழும்பு கொரொனா தடுப்புச் செயலணிக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் அங்கு இருந்து கிடைத்த தகவலின்படி குறித்த நபர் கண்டி வைத்தியாலைக்கு எடுத்துச் செல்லபட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடும்பத்திலுள்ளவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் வைத்திய அதிகாரி ரத்நாயக தெரிவித்தார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் அவருடன் தொடர்பு பட்டு இருந்தவர்கள் அவதானமாகவும் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாகி இருக்க வேண்;டும் எனவும் நோய்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியசாலையை உடன் நாட வேண்டும். இ;ந்த சந்தர்ப்பத்தில் தொற்று நோய்க்குள்ளான எமது பிரதேசத்தைச் சேர்ந்த நபர் உட்பட அவர் குடும்பத்தவர்கள் அனைவருக்கும்; நல்ல உடல் சுக ஆரோக்கியத்துடன் ஈடேற்றப் பெற இறைவன் நல்லருள் புரிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரொ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு முஸ்லிம்கள் அலட்சிமாக நடந்து கொள்கிறாhகள் என்பது பொதுவான அபிப்பிராயம் நிலவுகின்றன. எனவே உலகம் முழுவதும் வைரஸ் பரவுவதை கவனத்தில் கொள்ளும் போது இது இலகுவானதாகக் கருத முடியாது. எனவே முஸ்லிம்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்திற்கு இணங்க மிகுந்த அவதானத்துடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.