அக்குறணை ஜம்இய்யதுல் உலமா வழங்கும் உழ்ஹிய்யா வழிகாட்டல்கள்,

அக்குறணை ஜம்இய்யதுல் உலமா வழங்கும் உழ்ஹிய்யா வழிகாட்டல்கள்,

கொவிட் – 19 தொற்றுநோய் தொடர்ந்தும் அதிகரித்து வரும் இக்காலப்பகுதியில் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையும் உழ்ஹிய்யா அமலையும் நிறைவேற்ற இருக்கின்றோம். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கவனத்தில் கொண்டு எமது பெருநாள் தின கொண்டாட்டங்களையும் உழ்ஹிய்யா அமலையும் அமைத்துக் கொள்வது காலத்தின் தேவையாகும். எனவே, அக்குரணை ஜம்இய்யதுல் உலமா வழங்கும் பின்வரும் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடக்குமாறு கண்டிப்பாக வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

  1. பெருநாள் காலங்களில் குறிப்பாக, உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் நாட்களில் முகக்கவசம் அணிந்து கொள்ளல், சமூக கடைவெளியை எச்சந்தர்ப்பத்திலும் பேணிக்கொள்ளல், இரு கைகளையும் அடிக்கடி கழுவிக் கொள்ளல் போன்ற அனைத்து அரச சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி நடந்து கொள்வோம்.
  2. பல்லின சமூகத்தோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது எமக்கெதிராக உணர்வுகள் தூண்டப்படும் வகையிலோ உழ்ஹிய்யா அமலை செய்வதிலிருந்தும், பெருநாள் கொண்டாடுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வோம்.
  3. நம் நாட்டின் சட்டத்தை கவனத்தில் கொண்டு மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு வீபரச்சீட்டு, சுகாதார அத்தாட்சிப்பத்திரம் மிருகங்களை எடுத்தும் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கனை முன்கூட்டியே தயார் படுத்திக்கொள்வோம்.
  4. அனுமதியின்றீ உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை, வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதை விடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றாகத் தவீர்ந்து கொள்வோம்.
  5. உழ்ஹிய்யா கொடுத்த பின் அதன் கழிவுகளை (இரத்தம், தோல், தலை மற்றும் ஏனைய உடற் பாகங்களை) பொது இடங்களிலும், நீர்நிலைகளிலும் வீசாது அவற்றை உரிய முறையில் புதைத்து அகற்றி விடுவோம்.
  6. அறுவைக்காக பயன்படுத்தப்பட்ட இடத்திலும், அதன் கழிவுகளை புதைத்த இடத்திலும் கிருமிநாசினிகளை தெளித்து சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.
  7. உழ்ஹிய்யா நிறைவேற்றும் போது போட்டோ, வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை முற்றாகத் தவிர்ந்து கொள்வோம்.
  8. ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்து வரக்கூடிய மூன்று தினங்களில் எமது ஊரில் வேலையாட்களைக் கொண்டு வேலை செய்வதிலிருந்து முற்றாகத் தவீர்ந்து கொள்வோம்.
  9. போயா தினங்களில் கால்நடைகளை அறுப்பது நாட்டுச்சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, 23.07.2021 ஆம் திகதி போயா தினத்தில் உழ்ஹிய்யாவுக்கான கால்நடைகளை அறுப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்வோம்.
  10. பெருநாள் தினங்களில் தூர இடங்களுக்கு குடும்பமாகவோ நண்பர்களுடனோ பயணங்கள் செய்வதையும் குறிப்பாக, இளைஞர்கள் தேவையற்ற வீதத்தில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்வதையும் கண்டிப்பாக தவீர்ந்து கொள்வோம்.
  11. பெருநாளை அடுத்து வரக்கூடிய அய்யாமுத் தஷ்ரீக் உடைய மூன்று தினங்களும் பெருநாள் தினத்தைப் போன்ற தினங்களாகும். எனவே, நல்லமல்களில் ஈடுபடுதல், உண்டு மகிழ்தல், ஸதகாக்கள் வழங்குதல், தமது வீடுகளிலேயே இருந்து குடும்பத்துடன் பெருநாளை கொண்டாடுதல் போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்துவோம்.
  12. இக்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு குடும்ப ஒன்றுகூடல்கள், வீண் கேளிக்கைகள். விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்ந்து கொள்வோம். 13. உழ்ஹிய்யா கொடுக்க விரும்புபவர்கள் மார்க்க சட்டங்களையும், நாட்டுச் சட்டங்களையும், ஒழுங்குகளையும் முழுமையாக பின்பற்றி நடக்க முடியாத சந்தர்ப்பத்தில் உழ்ஹிய்யா கொடுப்பதை முற்றாக தனீர்ந்து கொள்வோம்.
    AKURANA JAMIYATHUL ULAMA 11.07.2021

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter