இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன், ஜெரூசலம் என்பன மிகவும் முக்கியமானதொரு பூமி என்றே கூறலாம். காரணம் அந்த பூமியிலேயே முஸ்லிம்களின் முதல் ஹிப்லா அதாவது முஸ்லிம்களின் தொழுகைக்கான திசை அமைந்துள்ள பள்ளிவாசலான ஜெரூசலம் அல்-அக்ஷா பள்ளிவாசல் அமைந்துள்ளது எனலாம்.
இஸ்லாத்தின் ஆரம்பகால கட்டத்தில், உலகில் முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் புனித அல்-அஷாவையே தமது ஹிப்லாவாக அடையாளப்படுத்தி தொழுகைகளை நடத்தி வந்துள்ளனர். பின்னர் அது புனித கஃபா சரீபுக்கு மாற்றப்பட்டது என்பது இங்கு முக்கியமானதாகும். அதன் பின்னர் புனித கஃபா முஸ்லிம்களின் ஹிப்லாவாக மாறியது.
இந்த வகையில் முஸ்லிம்களின் முதல் மூன்று முக்கிய இடங்களாக மக்காவில் புனித கஃபதுல்லாவும், மதினாவில் புனித மஸ்ஜிதுன் நபவியும், மூன்றாவதாக பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஷாவும் காணப்படுகின்றன. பலஸ்தீன் மண் பூர்வீகத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.
இந்த மண்ணில் அக்காலத்தில் சிறிய தொகையான யூதர்கள் வல்லரசுகளால் துரத்தியடிக்கப்பட்டபோது அவர்கள் எங்கு செல்வதென்று தெரியாமல் பலஸ்தீன் பகுதிக்கு தெறிகெட்டு ஓடிவந்தபோது அப்பாவி முஸ்லிம்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை வரவேற்றதாக ஆரம்பகால வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு முஸ்லிம்களால் அடைக்கலம் கொடுக்கப்பட்டவர்கள், 1948ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து ‘வளர்த்தகடா மார்பில் முட்டியது’ போல், அவர்கள் முஸ்லிம்களின் மீது தமது துரோகத்தனத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர். பிரித்தானிய அதிகார பீடம், யூத சியோனிச சக்திகளோடு இணைந்து முஸ்லிம்களைத் தாக்கும் கைங்கரியங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
இவ்வாறு அன்றிலிருந்து தொடங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான யூத ஆக்கிரமிப்பு, இன்று பல இலட்சக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவிக்க வித்திட்டதுடன், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழக்கவும், அவர்களின் இயற்கை வளங்களை அழிக்கவும் வழிசமைத்து விட்டது எனலாம்.
இக்கொடூரமான செயற்பாடுகளுக்கு உடந்தையானவர்கள் அரபுலக முஸ்லிம் நாடுகளே என்று கூறலாம்.
1948ஆம் ஆண்டு மே மாதம் அல்-சைதூன் எனும் இடத்திலிருந்த பள்ளிவாசலில் முஸ்லிம் மக்களைப் பூட்டிவைத்து, அதனை குண்டு வைத்து தகர்த்து பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தனர். இதே காலத்தில் காஸாவிலிருந்த மக்களை ஆயுத முனையில் விரட்டியடித்ததுடன், கர்ப்பிணிப் பெண்களையும் கொலை செய்தனர். ஒரு கிராமத்தையே குண்டு வைத்துத் தகர்த்தாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் உலகில் சுமார் 57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் அதிகமானவை எண்ணெய் வளத்தையும், ஏனைய செல்வங்களையும் கொண்டுள்ளதுடன், குறிப்பிட்ட சில நாடுகள் ஆயுத பலத்தாலும் முன்னணி வகிக்கின்றன எனலாம். இவ்வாறான நிலையில் பலஸ்தீன் மக்கள் சுமார் 70 வருடங்களுக்கும் மேலாக நாடே இல்லாத நிலையில் சிறு குழுக்களைக் கொண்ட யூதர்களால் ஆக்கரமிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த விடயத்தில் இந்த முஸ்லிம் நாடுகள் தட்டிக் கேட்காமலும், கண்டுகொள்ளாமலும் இருந்தமையானது, இன்று முழு உலகிலும் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு வித்திட்டது எனலாம்.
இங்கு முக்கியமான விடயம், யூதர்களை வளர்த்தவர்கள் இஸ்லாத்தின் முதல் விரோதி நாடான அமெரிக்காவாகும். அமெரிக்காதான் உலகில் முஸ்லிம்களைவிட தாம்தான் ஆட்சியதிகாரத்தில் வல்லரசாக இருக்க வேண்டும் என்ற மமதையுடன் திட்டமிட்டு முஸ்லிம்களை அழிப்பதற்கு இஸ்ரேலை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது.
ஆயுதங்கள் வழங்கியும், யுத்த தளவாடங்கள் மற்றும் பண உதவி வழங்கியும் பெருமளவில் வளர்த்தெடுத்தது எனலாம். இதன் காரணமாகவே அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையிலும்கூட இன்னும் சில இஸ்லாமிய விரோத நாடுகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு தனது ஆதிக்கத்தை சர்வதேச அளவில் வைத்துக் கொள்வதற்கான ஒரு சண்டித்தனமான மாபியாவை உருவாக்கி வைத்துள்ளது.
அமெரிக்கா தனது பணபலத்தையும், ஆயுத பலத்தையும் கொண்டு உலக நாடுகளை தனக்கு அடிபணிய வைத்துக் கொண்டு வருகின்றது. குறிப்பாக சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளை தம்வசம் வைத்துக் கொண்டு ஏனைய முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கர்கள் இஸ்லாமிய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை ஏற்படுத்தி, அந்த நாடுகளில் முஸ்லிம்களுக்குள் முஸ்லிம்கள் மோதும் வகையில் தீவிரவாதக் குழுக்களை மறைமுகமாக உருவாக்கி சண்டைகளை மூட்டிவிட்டு பின்னர் அந்த சண்டைகளை அந்த நாடுகளால் நிறுத்த முடியாது என்ற போர்வையில், அவர்களின் நாடுகளில் இருக்கும் குழுக்கள் தீவிரவாதிகள், அதிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள். அவர்களால் அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஆபத்து. எனவே, அவர்களை அடக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டிக் கொண்டு, தற்போது மத்திய கிழக்கில் பல முஸ்லிம் நாடுகளில் தனது படைகளை அத்துமீறி வைத்துக் கொண்டு, அந்த நாடுகளின் வளங்களை சூறையாடிக் கொண்டும், முஸ்லிம்களைக் கொன்று குவித்துக் கொண்டும், அந்த நாடுகளை இரத்தக்கறை படிந்த பூமிகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றமையே யதார்த்தமான உண்மையாகும்.
அமெரிக்காவின் வல்லாதிக்க மாபியாவால் தற்போது உலகில் முஸ்லிம்களே அதிகம் வன்முறைக்குள்ளாகி அழிக்கப்படுகின்றனர். என்றாலும் அமெரிக்காவின் சதிவலையில் ஈரான் போன்ற ஒருசில இஸ்லாமிய நாடுகள் சிக்கவில்லை. இந்த நாடுகளை பதம் பார்க்கும் கைங்கரியத்திலும் அமெரிக்கா விடாப்பிடியாகவே இருந்து வருவதைக் காண முடிகின்றது.
ஆரம்ப காலத்தில் ஆதரவு நல்கிய பலஸ்தீன் மக்களைத் தாக்கி தமது ஆதிக்கத்தை வலுவடையச் செய்கின்ற விடயத்தில் யுதர்கள் இறங்கி விட்டனர். அக்காலத்தில் பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்ட ஹகான என்ற யூத பயங்கரவாதக் குழுவை ஏவிவிட்டு முஸ்லிம்களை வெட்டியும், அடித்தும் தமது கொலைவெறியைக் காட்டினர். இந்தச் சம்பவம் வியட்நாமில் இடம்பெற்ற மைலாய் படுகொலைகளைப் போன்றதாகும் என முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சமூகத்தின் பூர்வீகங்களை கபளீகரம் செய்யும் துரோகத்தனத்திற்கு அப்பாவி மனித உயிர்களை, குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரை இலக்கு வைத்து இவர்கள் தமது அடாவடிகளை மேற்கொண்டனர்.
இவர்களின் மூலோபாயத் திட்டமானது, இஸ்லாமியர்கள் அழிப்பதற்கு முதலில் சிறுவர்களையும், பெண்களையும், கர்ப்பிணித் தாய்மாரையும் அழிப்பதன் மூலம் முஸ்லிம்களின் சனத்தொகையை அல்லது அவர்களின் பெருக்கத்தைக் குறைப்பதற்கானதொரு திட்டமாக இருந்தது எனலாம். இன்றுவரை அதைத்தான் யூதர்கள் செய்து வருகின்றனர். பச்சிளம் பாலகர்களை ஈவிரக்கமற்ற வகையில் கொன்று குவிப்பதன் மூலம் முஸ்லிம்களின் வருங்காலச் சந்ததிகளை இல்லாது செய்து தமது கைகளை ஓங்கச் செய்வதே யூத துரோகிகளின் எண்ணமாகும்.
தற்போது மிக மோசமான வகையில் பலஸ்தீன் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான குண்டுவீச்சுக்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அதனை நிறுத்தவோ வக்கில்லாத சர்வதேச நிறுவனமே தற்போது காணப்படுகின்றது.
தற்போது இஸ்ரேல், பலஸ்தீன் மற்றும் காஸாப் பகுதிகளில் மேற்கொண்டுள்ள கொலைவெறித் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றபோது, பல உலக நாடுகளின் மக்கள் இஸ்ரேலின் படுகொலைகளைக் கண்டித்தும், இஸ்ரேலுக்கும் அதன் இராணுவத்திற்கும் எதிராகப் பல கண்டனப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தின் கொடூரத் தாக்குதலால் இரத்த வெள்ளத்தில் மரணிக்கும் பலஸ்தீன் மக்களின் அவலத்திற்குள் இத்தாலி, இஸ்ரேலுக்கு ஆதரவாக முஸ்லிம்களை அழிப்பதற்கு பெருந்திரளான ஆயுதங்களை அனுப்புவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றமையும் இங்கு வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
ஈவிரக்கமற்ற வகையில் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் யூத இராணுவத்திற்கு இத்தாலி செய்யும் இந்த உதவிகள் சர்வதேச ரீதியில் பாரிய கண்டனத்திற்குள்ளாகிள்ளன. குறிப்பாக, இத்தாலிய துறைமுகத்தில், துறைமுக ஊழியர்கள் பலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்க அனுப்பப்படும் ஆயுதங்களை தாம் ஏற்றியனுப்பி, அந்த பாவத்தை நாங்கள் சுமக்க விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கி விட்டதாக அங்கிருந்துவரும் சர்வதேச செய்திகள் மூலம் அறியக் கிடைக்கின்றது.
சமாதானத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தி கொலைக் கலாசாரத்தை இல்லாது செய்ய வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் இத்தாலியின் ஈனச் செயல் பலராலும் வன்மையான கண்டனத்திற்குள்ளாகி இருக்கின்றது எனலாம். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் யூதர்களுக்கு ஆதரவு வழங்கும் இத்தாலிக்கு தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில் இத்தாலியின் பொருட்களைக் கொள்வனவு செய்யாது விடவேண்டும்.
யதார்த்தமான நிலையில் பலஸ்தீனில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் இராணுவத்தை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதற்கு சகல முஸ்லிம் நாடுகளும் ஒன்று திரள வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஒன்றுகூடலிலேயே பலஸ்தீன் மக்களின் எதிர்கால நிம்மதியான வாழ்வும் இருக்கின்றது எனலாம்.
ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் யூத பயங்கரவாதிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவுகளை வழங்கும் நாடுகளாகவே தற்போதும் காணப்படுகின்றன. இவ்வாறான நாடுகளால்தான் உலக IT சமாதானமும், இன ஒற்றுமையும் சீர்குலைந்து சின்னாபின்னமாகி உள்ளன எனலாம்.
இஸ்ரேலைப் பொறுத்தவரை அந்நாட்டின் தற்போதைய பிரதமருக்கான ஆதரவு, இஸ்ரேலிய மக்களிடத்தில் பாரியளவில் சரிந்து வரும் நிலையிலும், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையிலும், அதனைச் சரிசெய்து அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, பலஸ்தீன் மக்களை அழித்து, அதன்மூலம் மக்களின் எண்ணங்களைத் திசைதிருப்ப முனைகின்றமை தற்போது வெளிப்படையானதாகவே அமைந்துள்ளது.
தான் யூத மக்களுக்கு ஆதரவானவன் என்ற போர்வையில் எல்லா அடக்குமுறைக் கோட்பாடுகளையும், திட்டங்களையும் நிறைவேற்றி வெற்றி கொள்வதற்கு, முஸ்லிம் பகுதிகளில் யூதமத மயமாக்கலை மேற்கொண்டு முஸ்லிம்களை அங்கிருந்து துரத்தும் மிகக்கேவலமான மனிதாபிமானமற்ற கொலைகார நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். பலஸ்தீனில் இஸ்ரேலிய பிரதமர் எந்தவித அடாவடிகளை மேற்கொண்டாலும் அதனைத் தாம் எதிர்கொள்ளத் தயார் என ஹமாஸ் இயக்கம் தற்போது துணிந்து எழுந்துள்ளதையும், கடந்த காலங்களை விடவும் தற்போது இஸ்ரேலின் தாக்குதல்களை சரிசமமாக எதிர்த்துப் போரிடவும் அவர்கள் தயாராகி விட்டனர். என்றாலும், இந்தச் சண்டைகளால் முஸ்லிம்களே அதிக இழப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகள் உட்பட பல நூற்றுக்கணக்கான உயிர்களை யூத இராணுவம் கோழைத்தனமான முறையில் பலியெடுத்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவமும், இஸ்ரேலிய அரசும் தற்போது ஊடகங்களையும் தாக்கி தமது அடாவடிகளை வெளியுலகிற்குத் தெரியாத வகையில் மேற்கொள்வதற்கு பலஸ்தீனிலுள்ள அல்-ஜஸீரா ஊடக கட்டடத்தை குண்டு வீசித் தகர்த்துள்ளனர். குறிப்பாக இங்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ஊடகக் காரியாலயங்கள் இயங்கி வந்தன. இந்தத் தாக்குதலால் அது தரைமட்டமாகியுள்ளமையால் உலக ஊடக அமைப்புக்களின் பாரிய கண்டனத்திற்கும் இஸ்ரேல் உள்ளாகியிருக்கின்றது. இந்த கட்டடத் தாக்குதல் ஊடகத்திற்கு விடப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது என சர்வதேச ஊடக அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
எனவே, இவர்களின் இந்த மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனத்தை ஒழிப்பதற்கும், அவர்களின் அடாவடிகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் இஸ்லாமிய நாடுகள் இனியாவது தயங்காது உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். அவர்களின் அத்துமீறும் செயற்பாடுகளுக்கு ஒட்டுமொத்த முற்றுப்புள்ளி வைத்து புனித பூமியை பலஸ்தீனர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கு உதவ முன்வர வேண்டும் என ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும், 57 முஸ்லிம் நாடுகளையும் வேண்டி நிற்கின்றனர்.