நாட்டை முடக்குவது குறித்து எந்தவித தீர்மானமுமில்லையென இராணுவத் தளபதியும், கொவிட் தடுப்பு செயற்பாட்டுக் குழுவின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்துவரும் சில நாட்களுக்கு மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உணவு உள்ளிட்ட, மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், மக்களுக்கான அடிப்படை தேவைகளை தடையின்றி தொடர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, நாளைமுதல் முப்படையினரை ஈடுப்படுத்தி, கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதுடன், அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்படும் பிரதேசங்களில், அதிகளவான தடுப்பூசிகள் ஏற்றுவதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். –வீரகேசரி பத்திரிகை–