தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு செல்வது யார் என்பது தொடர்பில் ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இருவரிடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எமது மக்கள் சக்திக் கட்சியின் கொடி சின்னத்தின் கீழ் இவ்விருவரும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் நாடாளுமன்றம் செல்வதற்கு போதுமான வாக்குகள் கட்சிக்குக் கிடைக்கவில்லை.
எனினும் ஒட்டுமொத்த வாக்குகளை சரிபார்த்து தேசியப்பட்டியல் ஒன்று அந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அதனை அத்துரலிய ரத்ன தேரரா அல்லது ஞானசார தேரருக்கா பங்கிடுவது குறித்த பிரச்சினை தற்சமயம் அந்தக் கட்சிக்குள் உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஞானசார தேரரை நியமிப்பது தொடர்பில் அந்த கட்சி தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
எனினும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் உள்ளீர்க்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஞானசார தேரர் முன்வைத்திருந்த வேட்புமனு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய பட்டியலில் பெயரிடப்படாதவர்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதவர்களை தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடுவதற்காக அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளதாக கட்சியின் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றது.