அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம்

நீரெல்லை ஆரம்ப பாடசாலை மாணவ மாணவிகள் 24 பேர் பெற்றோர்களுடன் இனைந்து அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம்

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறணை நீரல்லை ஆரம்ப பாடசாலையில் 2020 ம் ஆண்டு ஆறாம் ஆண்டிற்கு சித்தி அடைந்த 24 மாணவர்களை அக்குறணணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு அனுமதிக்குமாரு கோரி அம் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் சகிதம் 08 ம் திகதி பாடசாலை முன் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள கருத்து தெரிவிக்கையில்,

நீரெல்லை ஆரம்ப பாடசாலை அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பொசனை பாடசாலை என்றும் அப் பாடசாலையை விட்டு வெளியேரும் மாணவர்கள் இப் பாடசாலைக்கு உள்வாங்ப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இருந்த போதும் கடந்த ஐந்து வருடங்களாக மாணவர்களை அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு உள்வாங்குதற்கு பாரிய போராட்டத்தை மேற் கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல் அன்வர் அவர்களிடம் வினவிய போது,

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நான்கு போசனை பாடசாலைகள் இருப்பதாகவும் அதில் நீரெல்லை பாடசாலை உள்ளடங்குவதில்லை என்று கூறியதுடன் போசனை பாடசாலைகளிலிருந்து வரும் மாணவர்களை அனுமதித்த பின் மிகுதியாகும் வெற்றிடங்களுக்கு நீரல்லை பாடசாலையில் கற்ற மாணவர்களை தூர அடிப்படையில் அனுமதிப்பதாகவும் தெரிவித்தார்.

அதே நேரம் இம்முறை 235 மாணவர்கள் ஆறாம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நீரெல்லை பாடசாலையில் இருந்து சுமார 20 மாணவர்களை அனுமதிக்க முடியும் என்றும் அவர்களின் நேர்முக பரீட்சைக்கான கடிதங்கள் கல்வி காரியாலயத்தினால் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இத் தகவலை பெற்றோர்களிடம் கூறி இருந்த போதும் ஆர்ப்பாட்டம் நடாத்தியதையிட்டு வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். (மொஹொமட் ஆஸிக்)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter