அலவதுகொட பொலிஸ் மற்றும் முக்கிய அமைப்புக்கள் இணைந்து நடாத்திய கலந்துரையாடலின் முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அறிவித்தல்
அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் திங்கட்கிழமை பி.ப 2 மணி முதல் ஊரடங்கு அமுலிற்கு வரும்.
ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவுறுத்தல்கள் பின்வருமாறு.
நாளை காலை 6 மணி முதல் அக்குறணை நகரில் உள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்களான சில்லரை வியாபார நிலையங்கள், பார்மஸி, கோழிக்கடைகள், பழக்கடைகள், மரக்கறிக் கடைகள், போக்கரி மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் என்பன மாத்திரம் திறக்கப்பட்டு பி.ப 1 மணிக்கு மூடப்படல் வேண்டும். (ஏனைய அனைத்து விதமான கடைகளும் மூடப்படல் வேண்டும்)
அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவு செய்ய தேவை உள்ளவர்கள் மாத்திரம் ஒரு வீட்டிற்கு ஒருவர் வீதம் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொண்டு பஸாரிற்கு வருகை தருவதுடன் பொருட்களை கொள்வனவு செய்த உடன் பஸாரை விட்டு வெளியேறிவிட வேண்டும். (முகக்கவசம் இன்றி பஸாரிற்கு வருகை தருகின்றவர்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்படுவார்கள்)
சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பஸாரிற்கு வருவதை தவிர்த்துக் கொள்வதுடன்
அத்தியவசிய தேவைகள் இன்றி பஸாரிற்கு வருகின்றவர்கள் மற்றும் பொது இடத்தில் நின்று கதைத்துக் கொண்டிருப்பதையும் முற்றுமுழுதாக தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பொருட்களை கொள்வனவு செய்யும் கடைகளில் கூட்டமாக அனுமதிக்கப்பட மாட்டாது என்பதுடன் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டால் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும், இவ் ஒழுங்குகளை மேற்கொள்ள அக்குறணை வர்த்தக சங்கத்தினால் தொண்டர்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது, அவர்களது அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றவும்.
பஸாரிற்கு வருகை தரும் அனைவரும் பி.ப 1 மணிக்கு முன்னர் பஸாரை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
அவசர மருத்துவ சேவைகளுக்கு அரச வைத்தியசாலைகளை அனுகவும் ஏனைய மருத்துவ சேவைகள் தொடர்பில் அக்குறணை மருத்துவ குழு சார்பாக வழிகாட்டல்கள் வழங்கபடும்.
பாஸாரில் இருந்து வீடுகளுக்கு சென்றதும் கைகளை முறையாக கழுவிக்கொள்வதுடன் பாதணிகளை வீட்டிற்குள் கொண்டு செல்வதையும் கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ளவும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு தயாவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
அலவதுகொட பொலிஸ்/ அக்குறணை பிரதேச சபை/ அக்குறணை பிரதேச செயலகம் / அஸ்னா மத்திய பள்ளி/ மருத்துவ சுகாதார அதிகாரி/ அக்குறணை மருத்துவக்குழு/ அக்குறணை வர்த்தக சங்கம்