சிங்கள சமூகம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய விடயம். Part II

பகுதி ஒன்றின் தொடர்ச்சி…

குறைந்த வருமானத்தைப் பெற்று வரும் அதிகமான சிங்களவர்கள் திருமண வைபவங்களுக்காகவும், பிறந்த நாள் வைபவங்களுக்காகவும் மரண வீடுகளுக்காகவும் பெரும் தொகைப் பணத்தை செலவிட்டு வருகின்றனர்.

கவனயீனம் மற்றும் ஒழுங்கின்மை காரணமாக சிங்கள மக்களில் கணிசமான எண்ணிக்கையினர் பிரதிவருடமும் வாகன விபத்துக்களில் (குறைந்த வயதிலேயே) மரணத்தைத் தழுவிக் கொள்வதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

சிங்கள மக்களின் மோசமான உணவுப் பழக்கங்கள் காரணமாக தொற்றா நோய்கள் ஏற்பட்டு பிரதி வருடமும் கணிசமான அளவினர் மரணத்தைத் தழுவிக் கொள்கின்றனர்.

பல ஆயிரக்கணக்கான சிங்கள இளை ஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதால் பிரதி வருடமும் அவர்கள் முகாம்களில் சீர்திருத்தப் பட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஒவ்வொரு நகரங்க ளிலும் எயிட்ஸ் நோயினால் கணி சமான எண்ணிக்கையில் சிங்கள இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

முறையான கல்வியின்றி குடிபெயர்க்கப்பட்ட அநாதைச் சிறுவர்கள் சிங்கள சமூகத்தில் பெரும் எண்ணிக்கையில் இனங்காணப்பட்டுள்ளனர். அதன் விளைவாக நாட்டில் செயலிழந்த. சமூகத்துக்குத் தேவையற்ற பிரஜைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

முறையான வழிகாட்டல் மற்றும் பொருளாதார வசதிகளற்ற பெரும் எண்ணிக்கையிலான சிங்கள மாணவர்கள் பிரதி வருடமும் பாடசாலைகளை விட்டும் இடைவிலகுகின்றனர்.

கலவன் பாடசாலைகளில் கற்கும் வயதுக்கு வராத கணிசமான மாணவ மாணவிகள் காதல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். நாடெங்கிலும் காளான் முளைப்பதுபோல் பாடசாலை மாணவ, மாணவிகள் தங்குமிடங்கள் (அறை வசதிகள்) அமைக்கப்பட்டு வருகின்றன. அவர்களது கட்டிளமைப்பருவ உணர்வுகள் தூண்டப்படுவதனால் எதிர் காலத்தில் ஒழுக்கமான சந்ததியினர் உருவாவதற்கு பெரும் தடையாகவும் சவாலாகவும் இவை மாறியுள்ளன.

இதன் பெறுபேறாக சிங்கள மக்களது சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

மூடத்தமனமான நம்பிக்கைகள் மற்றும் பயனற்ற சமய சடங்குகளுக்காகவும் சிங்கள மக்களில் கணிசமானோர் தமது பணத்தை வீண் விரயம் செய்கின்றனர். அப்பணத்தை பயனுள்ள வழிகளில் செலவு செய்தால் சிங்கள சமூகம் அதிகமான நன்மைகளை அடைய முடியும்.

சோம்பேறித்தனம், முறையான முகாமைத்துவமின்மை, வினைத்திறனின்மை மற்றும் சூழல் மாசடைதல் போன்றவை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி 10 வீதமே காணப்படுகின்றது இத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் 95 வீதமானோர் சிங்களவர்களே. இதன் விளைவாக உற்பத்திச் செலவு அதிகரிப்பதுடன் உற்பத்திகளை நுகர முடியாத நிலையும் பாமர மக்களுக்கு ஏற்படுகிறது. நாளடைவில் மேற்படி தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியா துள்ளது.

கிராமப் புறங்களிலும், நகர்ப் புறங்களிலும் வாழும் கணிசமான சிங்களவர்கள் காணிகள் வாங்குதல், விற்றல் விடயங்களில் பலவேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதுடன் அவர்கள் பலவேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் வாழும் கணிசமான சிங்களவர்களுக்குத் தேவையான வழிகாட்டலின்மை, பொருளாதார வசதிகள் இல்லாமை மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக ஏனைய சமூகங்களைப் போன்று வர்த்தக விடயங்களில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர்.

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது சிங்களவர்களில் 90% மானோர் ஆங்கில மொழி அறிவில் மிகவும் பின் தங்கியுள்ளனர்.

பிரதி வருடமும் சிங்கள இளைஞர்களில் கணிசமானோர் தமது காணிகள் மற்றும் சொத்துக்களை விற்று அதன் மூலம் பெற்றுக்கொள்ளும் பணத்தைக் கொண்டு வெளிநாடுகளுக்குத் தொழில் தேடிச் செல்கின்றனர். அதன் விளைவாக பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

. அரசியல் மயமாக்கப்பட்டுள்ள மேதினக் கூட்டம் அல்லது எமது நாட்டில் காணப்படும் மிக மோசமான அரசியல் கலாசாரம் காரணமாக சிங்கள மக்கள் பல்வேறு கட்சிகளாகப் பிரிந்து பிளவுபட்டுக்கொண்டே செல்கின்றனர்.

கல்வியறிவு அற்ற, மோசடிகளில் ஈடுபடக்கூடிய மற்றும் நேர்மையற்ற அரசியல்வாதிகளில் அநேகர் சிங்கள சமூகத்தில்தான் காணப்படுகின்றனர்.

. தெற்காசியா நாடுகளில் அமைந்துள்ள சர்வகலாசாலைகளுள் இலங்கையிலுள்ள சர்வகலாசாலைகளில்தான் மிக மோசமான ‘பகிடிவதைகள்’ (Ragging) நடைபெறுகின்றன. அதில் ஈடுபடும் அதிகமானோர் சிங்கள மாணவர்களே.

. எமது நாட்டில் பிரதி வருடமும் நடை பெற்று வரும் அதிகமான வேலைநிறுத்த ஆர்ப்பாட்டங்களிலும், மற்றும் மறியல் (Picketing) போராட்டங்களிலும் சிங்கள இளைஞர்களே கலந்து கொள்கின்றனர்.

எமது நாட்டிலுள்ள இடது சாரி இயக்கங்களிலும் தேசிய அமைப்புக்களிலும் அங்கத்தவர்களாக இருந்து அடிக்கடி ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் ஈடுபட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பெருளவில் குந்தகம் விளைவிப்பவர்கள் சிங்கள இளைஞர்களே

பாதாள உலகத்தின் அங்கத்தவர்களாக இருந்து கொண்டு அடிக்கடி கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்ற விடயங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள் சிங்கள இளைஞர்களே. அரசாங்கத்துக்குரிய முறையில் வரிகளை செலுத்தாமல் இருப்பவர்கள் சிங்களவர்களே. இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவுள்ளது.

பிரதி வருடமும் அதிக அளவில் மதுபானம் மற்றும் சிகரட் வகைகளை உற்பத்தி செய்து அவற்றை நுகர்வோரும் விநியோகிப்பவர்களும் சிங்களவர்களாகவே இருக்கின்றனர்,

நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் வாழும் மிகக்கூடிய கணிசமான பௌத்த பிக்குகள் சீர்கேடான வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

கணிசமான சிங்கள அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும், பெரும் தொகையாக சம்பளங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றால் நாட்டுக்குப் பயன் கிடைப்பதாக இல்லை. சிங்கள மக்களாலும் அரசியல்வாதிகளாலும் செய்யப்படும் வீண் செலவு களால் நாட்டுக்கு எவ்வித பயனும் கிடைப்பதாக இல்லை

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : மேற்குறிப்பிட்ட அநேகமான விடயங்களில் இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகத்தினரும் தொடர்புபட்டுள்ளனர். எனவே சகல சமூகங்களும் தம்மைத்தாமே சுய விசாரணை செய்து இந்த ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முன்வருவது காலத்தின் தேவையாகும். -எம்.எச்.எம் நியாஸ்-

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter