30 நிமிடங்களில் 35 பேருக்கு கொரோனா.
நாட்டில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்திற்குள் மாத்திரம் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்குறணையின் முக்கிய செய்திகளை தவறாமல் உடனுக்குடன் உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள, கீழே கிளிக் செய்து SMS பண்ணவும்
Daily Akurana News to your Mobile via SMS. Click the below button and send the SMS. 2.00+tax
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு
இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் கொழும்பு 12, பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 254
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 55 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களுள் 6 பேர் ஜா-எல, சுதுவெல்ல பகுதியிலிருந்து ஒலுவில் கொரோனா தடுப்பு முகாமிற்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சற்று முன்னர் கொரோனாவிடம் சிக்கிய மேலும் ஒருவர்.
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதற்கமைய கொரோனாவினால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்வர்களின் மொத்த எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.
சற்று முன்னர் இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 48 வயதுடைய இவர், சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த 7 ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் 186 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு
கொவிட் – 19 தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நாட்களை நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி , தனிமைப்படுத்தல் 14 நாட்களை 21 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது
உலகளாவிய ரீதியாக கொரோனா வரைஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது. 13 லட்சத்து 62 ஆயிரத்து 598 பேர் மொத்தமாக இந்த நோயானால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2 லட்சத்து 93 ஆயிரத்து 654 பேர் இந்த நோயில் இருந்து பூரணமாக குணமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் – 185 பேராக உயர்ந்தது..
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 185 பேரினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதுடன் 135 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
அதன்படி இதுவரை நாட்டில் 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரையில் 167 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரையில் 167 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிதாக மேலும் 4 பேர் கொரொனா தொற்று
இலங்கையில் புதிதாக மேலும் 4 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166 ஆக உயர்வு.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12223 பேர் இதுவரையில் கைது
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 4 பேருக்கு கொரோனா.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது
2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று
அதன்படி இதுவரை 152 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் ஐந்து பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
2ம் உலகப்போருக்கு பின் சந்திக்கும் பெரிய சவால்
இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது
கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2322 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த மூன்றாவது நபர்
நேற்றைய தியம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் குருதி அமுக்கம் ,சிருநீரக செயழிழப்பு மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர் மருதானை பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோ தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர்
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சு.சே. பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். -Hiru-
சகல விமான சேவைகளும் இரத்து
எதிர்வரும் 8ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 21 அம் திகதி வரை ஸ்ரீ லங்கன் விமான சேவையின் சகல சேவைகளையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸூக்கு பலியானோர் எண்ணிக்கை 44,212
உலக அளவில் கொரோனா வைரஸூக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மற்றுமொருவர் பூரண குணம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு நபர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சற்று முன்னர் மேலும் 3 பேர்.. அச்சத்தில் இலங்கை
இதற்கமைய இலங்கையில் 129 ஆக காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இன்று (31) பிற்பகல் 3.20 மணி வரை இலங்கையில் மேலும் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மின் பாவனையில் வீழ்ச்சி
நாட்டில் நாளாந்த மின் பயன்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மணித்தியாலத்திற்கு 49 முதல் 33 வரையிலான கிகாவோட் மின் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700,000 தாண்டியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 33,000 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தொற்றுக்கு உள்ளான மேலும் 2வர் அடையாளம்
வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தொற்றாளர் எண்ணிக்கை 979ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் 87 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண சுகம் அடைந்துள்ளனர். இது தவிர, 25 பேர் மரணமடைந்துள்ளனர்
ஸ்ரீ லங்கன் விமான சேவை பணிப்பெண்ணுக்கு கொரோனா
ஸ்ரீ லங்கன் விமான சேவை பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்கியுள்ள ஐ டி எச் வைத்தியசாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை
கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய 57 பேர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது
இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 65 ஆயிரத்தை எட்டியுள்ளது. குறித்த தொற்று காரணமாக 30 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
முதலாவது மரணம் பதிவானது IDH வைத்தியசாலையில்.
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னையிலிருந்து யாராவது இலங்கைக்கு வந்திருந்தால்
கடந்த 14 நாட்களில் இந்தியாவின் சென்னையிலிருந்து யாராவது இலங்கைக்கு வந்திருந்தால், அப்பகுதியில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 அக அதிகரித்துள்ளது. இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எவருக்கும் கொரோனா இல்லை
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரையில் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை-106
சற்று முன்னர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை-106
இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8200ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்று எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
18,000 சுற்றுலா பயணிகள் நாட்டில்
நாட்டில் 18,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர் எனவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்ஈகு ஏதேனும் தேவைகள் அல்லது பிரச்சினைகள் காணப்படுமாயின் 1912 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் மட்டும் 2,50,000 பேருக்கு கொரோனா
ஐரோப்பாவில் அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 2,50,000 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ளன. இத்தாலியில் 74,386 பதிவு செய்யப்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளன, ஸ்பெயினில் 56,188 பேர் உள்ளனர் என்று WHO தெரிவித்துள்ளது.
ரஸ்யாவிலும் வேகமாக பரவத்தொடங்கியது வைரஸ்
ரஸ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து மொஸ்கோ அனைத்து உணவுவிடுதிகள் கடைகள் மதுபான சாலைகள் உட்பட பொதுமக்கள் கூடுமிடங்கள் அனைத்தையும் 28ம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை மூடும்படி உத்தரவிட்டுள்ளது.
20,000 ஐ தாண்டிய மரண எண்ணிக்கை !
சற்றுமுன் உலகளவில் கொரோனா மரணம் இருபதாயிரத்தை தாண்டியது! இத்தாலியில் இன்று மட்டும் 683 பேர் மரணம்.
முகாமிலுள்ள குடியேற்றவாசிகள் பரிதாப வேண்டுகோள்
அவுஸ்திரேலியாவின் விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியா பிரதமருக்கு நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். எங்கள் குடும்பத்தவர்கள் மத்தியில் விடுதலை செய்த பின்னர் கடுமையாக கண்காணிக்கலாம் என கடிதத்தில் குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க யுத்த கப்பலில் மூவருக்கு கொரோனா வைரஸ்
அமெரிக்க யுத்தக்கப்பலொன்றின் மூன்று கடற்படை வீரர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் அறிவித்துள்ளது. யுஎஸ்எஸ் தியடோர் ரூஸ்வெல்ட் என்ற நாசகாரி கப்பலில் பணிபுரிந்த மூன்று கடற்படையினர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டத்தை மீறியமை- 3500 பேர் கைது
காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு காவல்துறையினரால் தடை ஏற்படுத்தப்பட்டால் 119 அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 011 2 44 44 80 மற்றும் 011 2 44 44 81 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது தொடர்பில் தகவல் வழங்க முடியும்
கொரோனாவின் தாண்டவம் அமெரிக்காவில்
கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் தீவிரமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான வீசாவிற்கு தற்காலிக தடை
பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கு வழங்கப்படும் வீசா சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளத. அனைத்து விமான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா – உலகளாவிய ரீதியான பலி அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 637ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன்,18810 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு சவுதி அரேபியாவில் முதல் மரணம்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சவுதி அரேபியாவில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.சவுதியில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 205 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.
கொழும்பு, கம்பஹா களுத்துறை அவதான வலயமாக பிரகடனம்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கொவிட்19 பரவல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த 3 மாவட்டங்களிலும் மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
3 மாவட்டங்கள் அபாயம் கூடிய மாவட்டங்களாக பிரகடனம்
கொழும்பு, களுத்துறை, கம்பஹா என்பன கொவிட் 19 அபாயம் கூடிய மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர்
வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.
இத்தாலியில் கொரோனாவின் தாண்டவம்
கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 601 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரையில் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6077ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 96 உயர்வு
இலங்கையில் மேலும் 5 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. அதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடனட்டை தொடர்பி்ல் முக்கிய அறிவிப்பு
மாதாந்த கடன் தொகையை ரூ.50,000 வரையான தேசிய கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்தப்படும் கடனட்டைக்கான கடன் வட்டி வீதத்தை அதிகபட்சம் 15வீதத்தின் கீழ் கொண்டு வருதலும் ஆகக் குறைந்த மாதாந்த அறவீட்டை 50வீதமாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை கொழும்பு மெனிங் சந்தை திறப்பு
நாளை (24)அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பு மெனிங் சந்தையை திறந்து வைக்கவுள்ளதாக பொது வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 91
இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டில் இதுவரை 91 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்
இலங்கையில் முதலாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரான வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டுனராக செயற்பட்டவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்திற்கு முழுமையான தடை
நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி, மரக்கறி போன்வற்றிற்கான போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1990 – கொரோனா தொற்றுக்கான புதிய இலக்கம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் தொடர்புகொண்டு சுகாதார பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
ஒரே நாளில் 1,600 மரணங்கள்
உலகையே அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று, உலகளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது.
புதிய ஊரடங்கு நேர அறிவித்தல்
இலங்கையில் அணைத்து மாவட்டங்களுக்கான புதிய ஊரடங்கு நேரங்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது – விபரங்கள்
வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 86ஆக அதிகரிப்பு
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிததுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு நேர்ந்த கதி
நாடளாவிய ரீதியில் காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறிய 1754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் முச்சக்கர வண்டி, உந்துருளி உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் உள்ளடங்கலாக 477 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.