அரசியல் பொறிக்குள் கண்டி முஸ்லிம்கள்!

கண்டி முஸ்லிம்‌ அரசியலுக்கு மிகச்‌ சிறப்பான வரலாறு உண்டு. அதாவது, நீண்ட காலமாக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துள்ள மாவட்டமும்‌ ஒரு தேர்தலில்‌ அதிக உறுப்பினர்களை நேரடியாக தெரிவு செய்த மாவட்டமும்‌ இதுவேயாகும்‌. இலங்கை முஸ்லிம்கள்‌ வரலாற்றில்‌ சிறந்த தலைமைகள்‌ உருவாகிய மாவட்டமும்‌ இம்மாவட்டமே. அரசியலில்‌ மட்டுமல்ல அதற்கப்பாலும்‌ ஆளுமைகள்‌ இங்கு உருவாகிமிருக்‌கின்றனர்‌.

இலங்கை முஸ்லிம்‌ முன்னோடியான எம்‌.சி.சித்திலெப்பை கண்டியிலிருந்து பாரிய சேவையை செய்திருக்கிறார்‌. கண்டியில்‌ பிறந்த ரி.பி.ஜாயா சுதந்திர இலங்கைக்கு பெரும்‌ பங்காற்றியுள்ளார்‌. கலாநிதி பதியுதீன்‌ மஹ்மூத்‌ கண்டியில்‌ தன்னையை ஆளுமையாக மிளிரச்‌ செய்து நாட்டின்‌ வளர்ச்சிக்கு பங்காற்‌நினார்‌. அக்குறணையைச்‌ சேர்ந்த ஏ.சி.எஸ்‌.ஹமீத்‌ இலங்கையை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்‌. இப்படி பல்வேறு முஸ்லிம்‌ முன்னோடிகள்‌ கண்டியை மையப்படுத்தி இருத்‌தளர்‌.

கண்டியில்‌ தேர்தல்‌ களம்‌ காணும்‌ ஹக்கீம்‌ மு.கா.வுக்கு தலைமை தாங்கி இன்றைய இலங்கை முஸ்லிம்‌ அரசியலில்‌ முக்கிய நபராக இருக்கிறார்‌. அத்‌துடன்‌. கண்டியைச்‌ சேர்ந்த றிஸ்வி முப்தி உலமா சபையின்‌ தலைமை நீண்டகாலம்‌ வகித்து வருகின்றார்‌. இப்படி இலங்‌கையின்‌ பல துறைகளிலும்‌ ஆளுமைகள்‌ பல உருவாகியுள்ளனர்‌. தொடர்ந்தும்‌ உருவாகிக்கொண்டிருக்கின்றனர்‌.

2020 இன்‌ பொதுத்‌ தேர்தல்‌ கண்டி மாவட்ட முஸ்லிம்களை பொறுத்தமட்டில்‌ மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில்‌ கட்டம்‌ கட்டமாக தேசியக்‌ கட்சிகளிலிருந்து முஸ்லிம்கள்‌ திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதும்‌, அவற்றில்‌ ஆளுமைமிக்க இளம்‌ தலைமைகளுக்கு இடமளிக்கப்படாமல்‌ இருப்பதும்‌ என பல கழுத்தறுப்புகள்‌ இடம்பெறுகின்றன. அத்துடன்‌, தேசியக்‌ கட்சியில்‌ இனரீதியிலான கட்சிகள்‌ ஆதிக்கம்‌ செலுத்துவதும்‌ அதற்கு உறுதுணையாக பலதரப்பினர்‌ இருப்பதும்‌ பல்வேறு வகையிலும்‌ தடங்கல்களை ஏற்படுத்துகின்றன.

1956 ஆம்‌ ஆண்டு முதல்‌ கண்டி மாவட்டத்தின்‌ முஸ்லிம்‌ பிரதிநிதித்‌துவம்‌ பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலை இம்முறை இழக்கப்பட்டு விடுமோ என்கின்ற நிலைமையும்‌ தோன்றியிருக்கிறது.

தொகுதிவாரி தேர்தல்‌ மூறையின்‌ கீழ்…

1956 இல்‌ கை சின்‌னத்தில்‌ சுதந்திரக்‌ கட்சி சார்பில்‌ கடுகன்னாவை தொகுதியில்‌ வெற்றிபெற்ற சீ.எஸ்‌.ஏ.மரிக்கார்‌. 1960 ஆம்‌ (ஆண்டு மார்ச்‌ தேர்தலிலும்‌ கலகெதர தொகுதியில்‌ போட்‌டியிட்டு வெற்றிபெற்றார்‌. என்றாலும்‌ 1960 ஆம்‌ ஆண்டு ஜூலை தேர்தலில்‌ அவர்‌ போட்‌டியிடவில்லை. அத்‌ தேர்தலில்‌ அப்துல்‌ ஜப்பார்‌ கலகெதர தொகுதியில்‌ சுதந்திரக்‌ கட்சி சார்பில்‌ போட்டியிட்டு வென்றார்‌. 1960 ஜூலை தேர்தலில்‌ அக்குற்ணை (இரட்டை) தொகுதியில்‌ போட்டியிட்ட ஏ.சி.எஸ்‌.ஹமீத்‌ இரண்டாவது வேட்பாளராக வென்றார்‌. 1965 ஆம்‌ ஆண்டு தோரதலில்‌ ௬.க.வில்‌ முஸ்லிம்‌ வேட்பாளர்கள்‌ எவரும்‌ போட்டியிடவில்லை. ஐ.தே.க. சார்பில்‌ யானை சின்‌னத்தில்‌ மீண்டும்‌ போட்டியிட்ட ஹமீத்‌ வெற்றி பெற்றார்‌. இவர்‌ தொகுதிவாரி முறையிலும்‌ விகிதாசார முறையிலும்‌ வென்று 1999 இல்‌ அவர்‌ மரணிக்கும்‌ வரை 39 வருடங்கள்‌ தொடர்ந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாத்‌துள்ளார்‌. வெளிநாட்டு அமைச்சராக இலங்கையை உலகின்‌ பல நாடுகளிலும்‌ தடம்பதிக்க வைத்ததுடன்‌, பல்வேறு உடன்படிக்கைகளிலும்‌ இலங்கை அரசாங்கம்‌ சார்பில்‌ ஒப்பமிட்டுள்ளார்‌. நாட்‌டிற்கு பாரிய சேவையாற்றிய முஸ்லிம்‌ அரசியல்‌ தலைமைகளில்‌ இவரும்‌ பிரதானமானவராவார்‌.

தொகுதிவாரித்‌ தேர்தல்‌ முறையின்‌ கீழ்‌ 1947 இலும்‌ 1952 இலும்‌ முஸ்லிம்‌ வேட்‌பாளர்கள்‌ களம்‌ கண்டு வெற்றிபெறவாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும்‌ 1956 தொடக்கம்‌ 1977 ஆம்‌ ஆண்டு தேர்தல்‌ வரை அத்தனை தேர்தல்களிலும்‌ ஒரு பிரதிநிதியாவது வெற்றி பெற்றிருக்கின்றனர்‌.

விகிதாசார கேர்தல்‌ முறையின்‌ கீழ்‌…

விகிதாசார தோதல்‌ முறை 1978 ஆம்‌ ஆண்டு அரசியல்‌ அமைப்பில்‌ அறிமுகப்‌படுத்தப்பட்டாலும்‌ 1988 ஆம்‌ ஆண்டு மாகாண சபை தேர்தலில்‌ முதன்முறையாக அமுலுக்கு வந்தது. இதல்‌ களம்‌ கண்டு மத்திய மாகாண சபைக்கு இரு முஸ்லிம்‌ பிரதிநிதிகள்‌ தெரிவாகினர்‌. ஏ.ஆர்‌.எம்‌.ஏ.காதர்‌, எம்‌.எச்‌.ஏ.ஹலீமும்‌ அறிமுகமாகினர்‌. இவர்களில்‌ அதிகூடிய விருப்பு வாக்குபெற்ற காதர்‌ மாகாண அமைச்சரானதுடன்‌, 1969 ஆம்‌ ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும்‌ ஏ.சி.எஸ்‌.ஹமீ’துடன்‌ போட்டியிட்டு வெற்றிபெற்றார்‌. ஏ.சீஎஸ்‌.ஹமீத்‌ விகிதாசார தேர்தல்‌ முறையில்‌ 1999, 1994 ஆம்‌ ஆண்டு தேர்தலிலும்‌ வென்றார்‌. காதர்‌ 2010 ஆம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்தல்‌ வரை ஐ.தே.க. சார்பில்‌ போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளுடன்‌ வென்றவராக காணப்படுகின்றார்‌. அவர்‌ மக்களோடு மிகவும்‌ நெருக்கமானவராகவும்‌ அவர்களின்‌ வறுமையை போக்க தனிப்பட்ட முறையில்‌ உதவும்‌ நபராகவும்‌ காணப்பட்டமையாலேயே தொடர்ந்தும்‌ வென்று வந்தார்‌.

2000 ஆம்‌ ஆண்டு தேர்தல்‌…

2000 ஆம்‌ ஆண்டு கண்டி அரசியலில்‌ புதிய திருப்பம்‌ ஏற்பட்டது. விகிதாசார தேர்தல்‌ முறையின்‌ கீழ்‌ தொடர்ந்து ஐ.தே.க.வினால்‌ மாத்திரம்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைத்து வந்த நிலையில்‌ அவ்வாண்டு நுஆ கட்சியில்‌ மரம்‌ சின்‌னத்தில்‌ போட்டியிட்ட ஹக்கீம்‌ தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்‌. அவர்‌ அன்று வெற்றிபெற பல்வேறு காரணங்‌ களும்‌ ஏதுவாக அமைந்தது. முதலாவது காரணம்தான்‌ அந்த தேர்தல்‌ இடம்‌ பெற சில நாட்களுக்கு முன்னர்‌ மு.கா. ஸ்தாபகத்‌ தலைவர்‌ எம்‌.எச்‌.எம்‌.அஸ்ரப்‌ விபத்தில்‌ மரணமானதும்‌ அதன்‌ மூலம்‌ கிடைத்த அனுதாப வாக்குகளுமாகும்‌ ஹக்கீம்‌ ஏற்கனவே 1994 ஆம்‌ ஆண்டு தேர்தலின்போது தேசியப்‌ பட்டியல்‌ மூலம்‌ பாராளுமன்றத்திற்கு உள்ளீர்க்கப்‌பட்டு அவர்‌ கண்டி மாவட்ட மக்களால்‌ அறியப்பட்டிருந்தமை இன்னொரு நன்‌மையாக காணப்பட்டது.

2000 ஆம்‌ ஆண்டு சந்திரிக்கா அரசாங்‌கத்திற்கு கண்டி முஸ்லிம்களின்‌ நோடி ஆதரவு இல்லையென்றாலும்‌ சந்திரிக்கா மீது முஸ்லிம்களுக்கு அபிமானம்‌ இருத்‌தது. ஆனாலும்‌ தொடர்ந்து சுதந்திரக்‌ கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரயோகித்து வந்தமையினாலும்‌ ஐ.தே.க. ஆதரவு நிலைப்பாடு காரணமாகவும்‌ ஹக்கீம்‌ கண்டியில்‌ கதிரை சின்னத்தில்‌ போட்டியிடாது தனித்து போட்டியிட்டார்‌. இதன்‌ போது, சுதந்திரக்‌ கட்சிக்காரர்கள்‌ பலரும்‌ ஹக்கீமுடன்‌ இணைந்து மரச்‌ சின்னத்திலேயே கண்டியில்‌ போட்டியிட்டனர்‌. அக்‌குறணையைச்‌ சேர்ந்த டாக்டர்‌ மஹ்ரூப்‌, கம்பளையைச்‌ சேர்ந்த புர்கான்‌ ஹாஜி யாரும்‌ இதில்‌ பிரதானமானவர்களாவர்‌. அத்துடன்‌, கண்டி மாவட்டத்தில்‌ மரச்‌சின்னத்தில்‌ போட்டியிட்ட பலரும்‌ சமூக அந்தஸ்துள்ள பிரபலங்களாகவும்‌ மக்கள்‌ செல்வாக்குள்ளவர்களாகவும இருந்தனர்‌. இதனால்‌ ஹக்கீமால்‌ கண்டியில்‌ 30 ஆயிரத்துக்கும்‌ மேல்‌ வாக்குகளை எடுத்து 5 வீதத்தை தாண்ட முடிந்தது.

சந்திரிக்கா அரசாங்கமும்‌ முஸ்லிம்‌களை நசுக்கவோ வெறுப்பு பிரசாரங்‌களோ காட்டவில்லை. இதனால்‌ அந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்‌ என தெரிந்தும்‌ ஹக்கீமுக்கு கண்டி முஸ்‌லிம்கள்‌ வாக்களித்தனர்‌ என்பது ஒருபுறத்தில்‌ நிதர்சனமாகும்‌. நுஆ கட்சியில்‌ கண்டியில்‌ போட்டியிட்‌டமை என்ற காரணத்தால்‌ ஐ.தே க.வின்‌ முஸ்லிம்‌ வாக்குகளில்‌ சரிவு ஏற்பட்‌டது. அத்துடன்‌, ஏ.சி.எஸ்‌.ஹமீத்‌ இறந்த பின்னர்‌ கண்டியில்‌ ஐ.தே.க. சந்தித்த முதலாவது தேர்தலும்‌ இதுவாகும்‌. ஏற்‌கெனவே மூன்று முறை மாகாண சபை தேர்தலில்‌ வெற்றிெெபற்ற ஹலீம்‌ 2000 ஆம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்தலில்‌ முதன்‌ முறையாக போட்டியிட்டார்‌.

மாகாண அமைச்சராகவும்‌ பதில்‌ முதலமைச்சரா கவும்‌ அறியப்பட்டிருந்த ஹலீம்‌ சிங்கள மக்கள்‌ மத்தியிலும்‌ அபிமானத்துக்குரியவராக இருந்தமை அவருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. அத்துடன்‌. இந்த தேர்தலில்‌ ஏ.ஆர்‌.எம்‌.ஏ. காதருக்கு தமிழ்‌ வாக்குகளும்‌ கணிசமான சிங்கள வாக்குகளும்‌ கிடைத்தன

2001, 2004 தேர்கல்கள்…‌

2001 ஆம்‌ ஆண்டு தேர்தலில்‌ ஹக்கீம்‌ ஐ.தே.க. பக்கம்‌ சாய்ந்தார்‌ இது ஐ.தே.க. ஆட்சியமைக்கும்‌ தேர்தலாக கணிக்கப்பட்டது. இதனால்‌ கண்டியில்‌ ஐ.தே.க. சார்பில்‌ இரண்டு வேட்பாளருக்கு போட்டியிட்டு சந்தர்ப்பம்‌ வழங்‌கப்படவில்லை. என்றாலும்‌ காதருக்கு தேசியப்பட்டியல்‌ கொடுக்கப்பட்டது. இந்த தேர்தலில்‌ ஹலீமும்‌ ஹக்கீமும்‌ கண்டியில்‌ வெற்றிபெற்றனர்‌. பைஸர்‌ முஸ்தபா 2004 ஆம்‌ ஆண்டு தேர்தலில்‌ இலங்கை தொழிலாளர்‌ காங்கிரஸ்‌ சார்பில்‌ ஐ தே.க.வில்‌ போட்டியிட்‌டதுடன்‌, ஐ.தே.க. சார்பில்‌ காதரும்‌ ஹ்லீமும்‌ களத்திலிருந்தனர்‌. மூன்று வேட்பாளர்களும்‌ வெற்றிபெபற்றனர்‌.

இதுவே ஒரு சின்னத்தில்‌ போட்டியிட்டு மூன்று முஸ்லிம்கள்‌ கண்டி மாவட்டத்‌திலிருந்து வெற்றிபெற்ற முதல்‌ சந்தர்ப்‌பமாகும்‌. எனினும்‌, 2001 ஆம்‌ ஆண்டு தேர்தலை தவிர ஐ.தே.க 1989 முதல்‌ இரண்டு முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பமளித்தது.

வரலாறு படைத்க தேர்தல்‌…

மிகவும்‌ மோசமான தோல்வியை ஐக்கிய தேசியக்‌ கட்சி சந்தித்தது 201௦ ஆம்‌ ஆண்டாகும்‌. என்றாலும்‌ கண்டி மாவட்டத்தில்‌ ஐ.தே.க. சார்பில்‌ 3 வேட்பாளர்கள்‌ வெற்றி பெற்றனர்‌. இது. ஐ.தே.க. வுக்கு தோல்வியாக இருப்‌பினும்‌ முஸ்லிம்களுக்கு வெற்றிதான்‌.

அத்துடன்‌, விகிதாசார தேர்தலில்‌ முதன்‌ முறையாக சுதத்திரக்‌ கட்சியிலும்‌ ஒருவர்‌ வெற்றிபெற்றார்‌. ஒரு மாவட்டத்தில்‌ அதிகூடிய முஸ்லிம்‌ வேட்பாளர்கள்‌ வெற்றிபெற்றதும்‌ இதுவே முதல்‌ சந்தர்ப்‌பமாகும்‌. கொழும்பில்‌ மூவர்‌ திகாமடுல்‌லயில்‌ மூவர்‌ என்ற அடிப்படையிலேயே தேர்தல்‌ வரலாற்றில்‌ வெற்றிபெற்றிருக்‌
கின்றனர்‌. 2010 ஆம்‌ ஆண்டு தேர்தல்‌ கண்டி முஸ்லிம்களுக்கு ஒரு சாதனைதான்‌.

எனினும்‌, இங்கு கவனிக்கத்தக்க சில விடயங்கள்‌ இருக்கின்றன. இ.தொ.கா. பின்னனியைக்‌ கொண்ட பைஸர்‌ முஸ்தபா கணிசமான தமிழ்‌ வாக்குகளுடனும்‌ சிங்கள வாக்குகளுடனும்‌ சேர்த்து ௬.க.வை ஆதரிக்கும்‌ முஸ்லிம்களை அரவணைத்துக்கொண்டே கண்டி மாவட்‌டத்தில்‌ பிரதிநிதித்துவத்தை தக்கவைத்‌துக் கொண்டார்‌. மலையகத்தில்‌ 600முஸ்லிம்களை தோட்ட ஆசியர்‌ நியமனத்தில்‌ உள்வாங்கிய நன்றிக்‌ கடனும்‌ அவருக்கு கண்டி முஸ்லிம்கள்‌ மத்தியில்‌ இருந்தது. இதனாலேயே அங்கு நான்கு பிரதிநிதிகள்‌ அதாவது 12 பேரில்‌ நால்வர்‌ தெரிவு செய்யக்‌ காரணமாக இருந்தது.

2015 பொதுத்‌ தேர்தல்‌…

2015 ஆம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்தலில்‌ ஐ.தே.க முஸ்லிம்களுக்கு ஒரு அநீதியை இழைத்தது என்று கூறுவதா? அல்லது பேரினவாதத்திற்கு பயத்தா? என்ற வினாக்கள்‌ எழுகின்றன. ஏனெனில்‌, கண்டி மாவட்ட தேர்தல்‌ வேட்பு மனுவில்‌ 3 முஸ்லிம்‌ வேட்பாளர்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது என அஸ்கிரிய மற்றும்‌ மல்வத்து பீடங்கள்‌ கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால்‌ காலாகாலமாக ஐ.தே ௧. பட்டியலில்‌ இருவருக்கு இடம்‌ அளிக்கப்பட்டுவந்த நிலையில்‌ 2015 ஆம்‌ ஆண்டில்‌ ஒருவருக்கு மாத்‌திரமே இடம்‌ கிடைத்தது. ஏற்கெனவே பாராளுமன்ற பிரதிநிதித்துவம்‌ பெற்‌றுவந்த காதர்‌ ஹாஜியார்‌ கட்சி மாறியமையால்‌ அந்த இடம்‌ பறிபோனதா? அல்லது பட்டியலில்‌ மு. கா. தலைவர்‌ ஹக்கீமுக்கு இட ஒதுக்கீடு கொடுத்‌ததால்‌ ஐ.தே.க. சார்பான ஒருவருக்கு சந்தர்ப்பம்‌ கிடைக்காமல்‌ போனதா என்‌கின்ற வினாவும்‌ எழத்தான்‌ செய்கின்றன.

அத்துடன்‌ நாடு முழுவதும்‌ ராஜபக்ஷாக்களுக்கு எதிரான முஸ்லிம்‌ அலையொன்று இருந்தமையால்‌ ஐ.ம.சு.மு.வின்‌ வெற்றிலை சின்னத்தில்‌ போட்டியிட்ட மூத்த அரசியல்வாதியான காதர்‌ ஹாஜியார்‌ 7500 வரையிலான வாக்குகளையே பெற்று தோல்வி கண்டார்‌. இதனால்‌ நான்கு என்று இருத்த கண்டி மாவட்ட முஸ்லிம்‌ பாராளுமன்ற பிரதிநிதித்துவம்‌ இரண்டானது. 2020 பொதுத்‌தேர்தலில்‌ அது பூச்சிய நிலைக்கு மாறிவிடுமோ என்கின்ற அச்ச நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

2020 கண்டி தேர்தல்‌ களம்‌

இம்முறை பொதுத்‌ தேர்தலில்‌ கண்டி மாவட்டத்தில்‌ பலமுனை போட்டி நிலவுகின்றது. முஸ்லிம்களின்‌ ஆதரவை கடந்த காலங்களில்‌ பெற்றுவந்த பழம்பெரும்‌ கட்சியான ஐக்கிய தேசியக்‌ கட்சியில்‌ முன்னாள்‌ மாகாண சபை உறுப்பினர்களான ஜெ.ஜெய்னு லாப்தீன்‌(லாபிர்‌ ஹாஜியார்‌), எம்‌.ரி எம்‌. முத்தலிப்‌ ஆகியோரும்‌, இன்று முஸ்லிம்‌களின்‌ கவனம்‌ திரும்பியிருக்கு ஐக்கியமக்கள்‌ சக்தியில்‌ முன்னாள்‌ அமைச்சர்களான எம்‌ எச்‌.ஏ.ஹலீமும்‌ ரவூப்‌ ஹக்கீமும்‌ போட்டியிடுகின்றனா்‌. அத்துடன்‌, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில்‌ ஏ.எல்‌.எம்‌. பாரிஸும்‌ ஆளும்‌ கட்சி சார்பு சுயேட்சைக்குழுவொன்றும்‌ போட்டியிடு
கின்றனர்‌. அத்துடன்‌ மக்கள்‌ விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணியான தேசிய மக்கள்‌ சக்தியில்‌ எம்‌ எம்‌.எம்‌. முத்தலிபும்‌, எம்‌.எப்‌.எம்‌.ரியாசும்‌ போட்டியிடுகின்றனர்‌. இவ்வாறு பல தரப்பிலும்‌ வேட்பாளர்கள்‌ களமிறங்கியுள்ளதால்‌ வாக்குகள்‌ பிரிந்து பிரதிநிதித்துவம்‌ இல்‌லாமல்‌ போய்விடுமோ என்கின்ற அச்சம்‌
ஏற்பட்டிருக்கிறது.

வாக்குகள்‌ சிதறும்‌

ஐக்கிய தேசியக்‌ கட்சி இம்முறை கண்டி மாவட்டத்தில்‌ மூன்றாம்‌ தரப்‌பாகவே இருக்கும்‌. அவர்களுக்கு ஒரு ஆசனம்‌ மாத்திரம்‌ கண்டியில்‌ கிடைக்‌கலாம்‌ என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில்‌ முஸ்லிம்‌ நபர்‌ ஒருவர்‌ வெற்றி பெறுவார்‌ என நிச்சயித்து கூற முடியாது. எனினும்‌, அதற்கான வாய்ப்புகள்‌ இருக்‌கின்றன. அடுத்தபடியாக, தற்போது சஜித்‌ பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்‌ சக்திக்கு கண்டியில்‌ முஸ்லிம்கள்‌ மத்தியில்‌ ஆதரவு பெற்றிருந்தாலும்‌ அக்‌கட்சியில்‌ வெற்றிபெறும்‌ வேட்பாளர்கள்‌ 60 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட வாக்குசுளை பெற வேண்டும்‌ என்கின்ற நிலை இருக்கிறது. கடந்த தேர்தலில்‌ 1 இலட்‌சத்திற்கும்‌ மேற்பட்ட வாக்குகளுடன்‌ வென்ற ஹக்கீமும்‌ ஹலீமும்‌ இம்முறை அந்தளவுக்கு வாக்குகளை பெறுவார்‌களா என்கின்ற சந்தேகம்‌ நிலவுகின்றது. இவர்களுக்கு சாதகமான வாக்குகள்‌ ஐ.தே.க.வுக்கு பிரிந்து செல்வது பிரதான காரணமாகும்‌. கடந்த தேர்தலின்போது கிடைத்த சிங்கள வாக்குகள்‌ இம்முறை அவர்களுக்கு கிடைக்குமா என்கின்ற சந்‌தேகமும்‌ அடுத்த சவாலாகும்‌.

அத்துடன்‌, பொது ஜள பெரமுளவில்‌ போட்டியிடும்‌ பாரிஸ்‌ பெரும்‌ சவாலாக மாறாவிட்டாலும்‌ குறைந்தளவு முஸ்லிம்‌ வாக்குகள்‌ அந்த பக்கம்‌ இம்முறை திரும்பும்‌. அது ஆளும்‌ கட்சியாக வரும்‌ தரப்புடன்‌ இருக்க வேண்டும்‌ என்கிற நிலைப்பாட்டின்‌ காரணமாக திரும்பும்‌ வாக்குகளா? அல்லது மிரட்டல்களுக்கு பயந்து அடிபணிந்து அளிக்கப்படும்‌ வாக்குகளா? என்று நிச்சயித்து கூறமுடியாது.

அடுத்ததாக குறைந்தளவு முஸ்லிம்‌ வாக்குகள்‌ தேசிய மக்கள்‌ சக்தி அதாவது மக்கள்‌ விடுதலை முன்னணிக்கு செல்‌வது வழமை, அதில்‌ எந்தவித மாற்றமும்‌ இருக்காது. இன்று புதியதொரு நிலைப்‌பாடாக சுயேட்சைக்குழுவொன்றின்‌ மூலம்‌ அதிகமான முஸ்லிம்‌ வேட்பாளர்கள்‌ களமிறக்கப்பட்டுள்ளனர்‌. இந்த தரப்பில்‌ அக்குறணை பிரதேச சபை தவிசாளர்‌ இஸ்திஹார்‌ போட்டியிடுகின்றார்‌. இதனால்‌, அக்குறணைக்குள் ஒரு தொகை வாக்குகள்‌ பிரிந்து செல்‌லக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இப்படி பல தரப்புக்கும்‌ வாக்குகள்‌ சிதறடிக்கப்படும்போது கண்டி மாவட்டத்தின்‌ முஸ்லிம்‌ பிரதிநிதித்துவம்‌ பூச்சிய நிலைக்கு சென்றுவிடும்‌ என்கின்ற அச்ச நிலை தோன்றுகின்றது.

இன்றைய சவால்கள்‌…

கண்டி மாவட்டத்தில்‌ முஸ்லிம்‌ பிரதிநிதித்துவத்தை இல்லாமல்‌ செய்வதற்கு பேரினவாத சக்திகள்‌ கங்கணம்கட்டிக்‌ கொண்டு திரிகின்றன. எனவே இதனை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்‌. எல்லா தரப்புக்கும்‌ அரசியல்‌ செய்யும்‌ உரிமையுண்டு. அவர்களின்‌ தேர்தல்‌ விஞ்ஞாபனம்‌, இலக்கு நோக்கு என்பன அலசி ஆராயப்படவேண்டியவையாகும்‌. இந்நிலையில்‌, இம்முறை தேர்தலில்‌ கட்சிகளின்‌ இலக்கு, அவர்களின்‌ நோக்கம்‌ என்பன கொஞ்சம்‌ கொஞ்சமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள்‌ இவற்றை சரிவர புரிந்துகொண்டு பேரினவாத சக்திகளின்‌ பொறிகளுக்குள்‌ சிக்கிவிடாது கண்டியின்‌ முஸ்லிம்‌ பிரதி நிதித்துவத்தை பாதுகாக்க பொறுப்புடன்‌ செயற்படவேண்டியது காலத்தின்‌ கட்டாயமாகும்‌.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter