நாளை பிர­த­ம­ருக்கு கடி­தமொன்றை கைய­ளிக்­க­வுள்ள ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர்கள்: காரணம் இதுதான்.!

(நா.தினுஷா) 

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்ள ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வ­தற்­காக செயற்­குழு மற்றும் பாரா­ளு­மன்ற குழுவை கூட்­டு­மாறு கோரி கடி­த­மொன்றை நாளை வெள்­ளிக்­கி­ழமை அந்த கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்க  உள்­ள­தாக பிரதி அமைச்சர் நளின் பண்­டார தெரி­வித்தார். 

ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு  செய்­வது குறித்து ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் எழுந்­துள்ள கருத்து வேறு பாடுகள் தொடர்பில் வின­விய தே அமைச்சர் இதனை குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

கட்­சியின் பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வதே கட்­சியில் அனே­க­மா­ன­வர்­களின் நிலைப்­பா­டா­க­வுள்­ளது. அதே­போன்று கூட்­ட­ணியை அறி­விப்­ப­தற்கு முன்னர் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­வித்தால்  மாத்­தி­ரமே உறு­தி­யான கூட்­ட­ணி­யொன்றை கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதுவே  எனது நிலைப்­பாடும் ஆகும். 

கடந்த முதலாம் திகதி கட்­சியின் மத்­திய செயற்­குழு கூடிய போது, சஜித் பிரே­ம­தா­சவை  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும் என்ற நிலை­பாட்­டினை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தோம். தற்­போ­தைய சூழ்­நி­லையில்  ஜனா­தி­பதி வேட்­பா­ளரை  விரைவில் அறி­விக்க வேண்டி தேவையும் எமக்கு எழுந்­துள்­ளது.  

அவ்­வாறு ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வது குறித்து தீர்­மா­னிப்­ப­தற்கு விரைவில் கட்­சியின் செயற்­கு­ழு­வையும் பாரா­ளு­மன்ற குழு­வையும் அழைப்­பது அவ­சி­ய­மாகும். இந்­நி­லையில்  செயற்­கு­ழு­வையும் பாரா­ளு­மன்ற குழு­வையும் விரைவில் கூட்­டு­மாறு   கோரி கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கடி­த­மொன்றை கைய­ளிக்க தீர்­மா­னித்­துள்ளோம்.  

இது­வ­ரையில் அனே­க­மான உறுப்­பி­னர்கள் இந்த கோரிக்கை கடி­தத்தில்  கைசாத்­திட்­டுள்­ளனர். எனவே நாளை வெள்­ளிக்­கி­ழமை இந்த கடி­தத்தை அனுப்பி வைக்­க­வுள்ளோம். அதனை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தீர்­மா­னங்­க­ளுக்கு அமை­வாக எங்­களின் முடி­வு­களை அறி­விப்போம்.  

யார் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டாலும் கூட்­ட­ணியை அறி­விப்­ப­தற்கு முன்னர்  ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்க வேண்டும். தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதும் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விப்­பதால் வெற்­றியை ஈட்­டு­வதில் சிக்கல் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. கூட்­ட­ணியை பொறு­மை­யாக அறி­விக்­கலாம். ஆனால் தற்­போ­தைய நிலையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விப்­பதே  சிறந்த அர­சியல் பய­ணத்­துக்கு வாயப்­பாக இருக்கம். ஜனா­தி­பதி வேட்­பாளர் இன்றி கூட்­ட­ணியை  அமைத்தால்  கூட்­ட­ணிக்குள் சிக்கல் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உருவாகலாம். 

எது எவ்வாறாயினும் நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எங்களிடம் எந்த கருத்து வேறுப்பாடும் இல்லை. வேட்பாளர் குறித்து கலந்துரையாடி விரைந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.    

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter