கப்­பலில் வந்த கழி­வு­களால் புற்­றுநோய் ஏற்படும் அபாயம்: மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் எச்சரிக்கை..!

நாட்­டிற்குள் கப்பல் மூலம் கொள்­க­லன்­களில்  கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள கழி­வுப்­பொ­ருட்­களில் மருத்­து­வக் ­க­ழி­வுகள்  காணப்­படின் அது பாரிய ஆபத்தை தோற்­று­விக்கும் என அரசாங்க மருத்­துவ அதி­கா­ரிகள் சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் ஹரித அளுத்கே எச்­ச­ரித்­துள்ளார். 

சுங்­கத்­தி­ணைக்­களம் சுற்­றாடல் பாது­காப்பு  சுகா­தார நட­வ­டிக்­கை­களில் அக்­கறை செலுத்­த­ தவ­றி­யுள்­ளது எனவும் அவர் குற்­றஞ்­சாட்­டினார். இந்த கழிவுப் ­பொருட்­க­ளினால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­தினை உணர்ந்து சுகா­தார நட­வ­டிக்­கை­களை  கண்­கா­ணிக்க அதி­கா­ரி­யொ­ரு­வரை நிய­மிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார். 

மேலும், நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள கழி­வுப்­பொ­ருட்­களில் மருத்­துவக்கழி­வுகள் மற்றும் உடல் பாகங்­களும்  காணப்­ப­டு­வ­தாக  அண்­மையில் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. குறித்த சத்­திர சிகிச்சை கழி­வுகள் தொடர்பில்  வீர­கே­சரிக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். மேலும் அவர் கூறு­கையில்,

வெளி­நாட்டு கழி­வுகள்  நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளமை தொடர்பில்  தற்­போது பாரிய சர்ச்சை மூண்­டுள்­ளது. தடுத்துவைக்­கப்­பட்­டுள்ள கொள்­க­லன்­களில் மருத்­துவக்  கழி­வு­களும்  இருப்­ப­தாக  தக­வல்கள்   வெளி­வ­ரு­கின்­றன.  ஆகவே,  இது தொடர்பில்  உரிய  தரப்­பினர்  தகுந்த  விசா­ர­ணை­களை  மேற்­கொள்ள  வேண்டும். ஏனெனில்  அவ்­வா­றான  மருத்­துவக்  கழி­வுகள் காணப்­படின்  அது  மிகவும்  ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடும்.  அதனை சாதா­ர­ண­மான  விட­ய­மாக    எடுத்­துக்­கொள்ள  முடி­யாது.

கொண்­டு­வ­ரப்­பட்ட  கழி­வுப்­பொ­ருட்கள்  தற்­போது  துறை­மு­கத்தில்   கொள்­க­லன்­க­ளி­லி­ருந்து வெளியில்  அகற்­றிய  நிலை­யி­லேயே காணப்­பு­டு­கின்­றன வெயில் , மழை  போன்­ற­வற்­றினால்  மேலும்  அவை  சேத­மா­வ­துடன்  சுற்­றுச்­சூ­ழ­லுக்கு  பங்கம்  விளை­விக்கக்  கூடிய  நிலை  காணப்­ப­டு­கின்­றது .

இதனால் புற்­றுநோய்  , சுவா­சப்­பி­ரச்­சினை, மற்றும் வாந்­தி­பேதி போன்ற நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள்  அதிகம் காணப்­ப­டு­கின்­றன. இது  தொடர்பில்   சுங்­கத்­தி­ணைக்­களம் அதீத கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.ஆனாலும், இது தொடர்பில் தகுந்த சுகா­தார நடை­மு­றைகள் சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தில் இல்லை. இவ்­வா­றான  கழி­வுப்­பொ­ருட்­க­ளினால் சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தில் தொழில்  புரி­வோ­ருக்கும்  பார­தூ­ர­மான பாதிப்­புக்கள்ஏற்­ப­டக்­கூ­டிய  ஆபத்து காணப்­ப­டு­கின்­றது.  

ஆகவே, சுகா­தார நட­வ­டிக்­கைகள்  தொடர்பில் கவனம் செலுத்­து­மாறு சுங்­கத்­தி­ணைக்­க­ளத்­திடம் கேட்­டுக்­கொண்­டுள்­ளளோம். அர­சாங்கம்  நாட்­டுக்கு பாரிய ஆபத்தை ஏற்­ப­டுத்த கூடிய சிங்­கப்பூர்  ஒப்­பந்­தத்தில் திருட்­டுத்­த­ன­மாக  கைச்­சாத்­திட்­டது. அதன்­வி­ளை­வா­கவே இத்­த­கைய  நிலை  ஏற்­பட்­டுள்­ளது. அதற்கு எதி­ராக  அர­சாங்க  மருத்­துவ  அதி­கா­ரிகள்  சங்கம்  உள்­ளிட்ட  அமைப்­புக்கள் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தன.  

சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தின் தர­வு­களின் படி  241  கழி­வுப்­பொ­ருட்­கொள்­க­லன்கள்  நாட்­டிற்குள்  கொண்டு வரப்­பட்­டுள்­ளன.  அவற்றில்130 கொள்­க­லன்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­துடன், அவற்றில் எஞ்­சிய 111 கொள்­க­லன்கள் கொழும்பு துறை­மு­கத்தில்  தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் பொறுப்­புக்­கூற  வேண்­டிய  தரப்­பினர்  இந்தப் பிரச்­சி­னையை  திசை  திருப்ப  முயற்­சிக்­கின்­றனர்.2013  ஜூலை  13  ஆம்  திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி  அறி­வித்­தலைச்  சுட்டிக்காட்டி கடந்த  அரசாங்கத்தின்   மீது  குற்றஞ்சாட்டுகின்றனர்.இவ்விடயம்  தொடர்பில்  விசாரணைகளை  மேற்கொள்ள  வேண்டியது அவசியமாகும்.  ஆகவே  , ஜனாதிபதி  இந்த விடயத்தில் கவனம்  செலுத்தி பிரச்சினைக்கு தீர்வைப்  பெற்றுத்  தருவதுடன், அவர் சுற்றாடல் அமைச்சர்  என்பதால்  இது தொடர்பில்  தகுந்த விசாரணைகளை  மேற்கொள்ள  ஜனாதிபதி  விசாரணை  ஆணைக்குழுவை   அமைக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/61375

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter