பிணையில் விடுதலையான வைத்தியர் ஷாபிக்கு பிரதி ஞாயிறு தோறும் சி.ஐ.டி.யில் கையொப்பமிட உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)  

குரு­ணாகல்  போத­னா ­வைத்­தி­ய­சா­லை­யின்­ பி­ர­சவ மற்றும் பெண்­ணியல்  நோய்­  வி­வ­கார பிரிவின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு குரு­ணாகல் நீதி­மன்றம் நேற்று பிணை வழங்­கி­யது.

இரண்டு இலட்­சத்து  ஐம்­பது ஆயிரம்  ரூபா  ரொக்க  பிணை­யிலும்  25 இலட்சம் ரூபா  பெறு­ம­தி­யான  நான்கு  சரீர  பிணை­க­ளிலும்  செல்ல  அனு­ம­தித்த குரு­ணாகல்  பிர­தான  நீதவான்  சம்பத்  சேவா­வசம்  பிணை­யா­ளர்­களை  தமது  வதி­வி­டத்தை   உறுதி  செய்­ய­வேண்டும் எனவும்   ஒவ்­வொரு  ஞாயிறு  தினத்­திலும்   காலை 9 மணிக்கும்  ,  நண்­பகல்  12  மணிக்கும்  இடையே  குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவில்  ஆஜ­ராகி  கையெ­ழுத்­திட  வேண்டும்  எனவும்   உத்­த­ரவு  பிறப்­பித்தார்.  

வைத்­தியர் ஷாபிக்கு  எதி­ரான வழக்கு  விசா­ரணை  நேற்று  குரு­ணாகல்  பிர­தான  நீதவான்  நீதி­மன்­றத்தில்  இடம்­பெற்­றது.  இதன்­போது  14 நாட்கள்  விளக்­க­ம­றி­யலில்  வைக்­கப்­பட்­டி­ருந்த வைத்­தியர்  ஷாபி  சிறை  அதி­கா­ரி­க­ளினால்  நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

இதன்­போது குரு­ணாகல் நகர் எங்கும்   பொலிஸ்­பா­து­காப்பு  பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.முற்­பகல்  வேளையில் குரு­ணாகல்  கண்டி  வீதி­யி­லுள்ள  சுற்­று­வட்டம்   அருகே  வைத்­தியர்  ஷாபிக்கு  எதி­ராக  ஆர்ப்­பாட்­ட­மொன்றும்  இடம்  பெற்ற நிலை­யி­லேயே   பிற்­பகல்  1.30  மணிக்கு  வழக்கு  விசா­ர­ணைக்கு  வந்­த­போது  குரு­ணாகல்  நீதி­மன்றில் பாது­காப்பு   அதி­க­ரிக்­கப்­பட்டு  கலகம்  அடக்கும்  பொலிசார்  வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இந்த நிலை­யி­லேயே வழக்கு  விசா­ரிக்­கப்­பட்­டது.  

வழக்கு  விசா­ர­ணைக்கு  வந்­த­போது  முறைப்­பாட்­டா­ளர்கள்  சார்பில்  சி.ஐ.டியின்  பொலிஸ்  அத்­தி­யட்­சகர்  நுவன் அசங்க  , உதவி  பொலிஸ்  அத்­தி­யட்­சகர்   பி.எஸ். திசேரா  , பொலிஸ் பரி­சோ­தகர்  இலங்க  சிங்க, சார்ஜன்ட்  ராஜ­பக்ஷ, கான்ஸ்­டபிள்  சில்வா  உள்­ளிட்ட குழு­வினர்  ஆஜ­ரா­கினர்.

 அவர்­க­ளுக்கு   கூடுதல்  பலம் சேர்க்க  சட்­டமா அதிபர்  சார்பில்  சிசேஷ்ட  பிரதி சொலி­சிட்டர்  ஜெனரல்   துசித முத­லிகே  மன்றில்  பிர­சன்­ன­மானார்.  வைத்­தியர் ஷாபி  சார்பில்  ஜனா­தி­பதி  சட்­டத்­த­ரணி   நவ­ரத்ன பண்­டார    தலை­மையில்  சிரேஷ்ட  சட்­டத்­த­ரணி  சிராய்­நூர்தீன்  , பிரேம ரத்ன  தென்­னக்கோன்  , சப்ரா  ஹன்ஸா , பசன் வீர­சிங்க  , பாய்நாஸ்  மொஹமட்  ,  மகேஷ்  தேரு­ஐ­கொட , ஆர்.  சேனா­தீர  உள்­ளிட்டோர்  ஆஜ­ரா­கினர்.

 கருத்­தடை  செய்­த­தாக  முறைப்­பாடு  அளித்­துள்ள  தாய்­மார்கள்  சார்பில்  ஜனா­தி­பதி  சட்­டத்­த­ரணி   மொஹான்  வீர­சே­கர,  இந்­தி­ர­சிறி  சேகா­ரத்ன  , சானக்க  உள்­ளிட்ட  சட்­டத்­த­ர­ணிகள்  ஆஜ­ரா­கினர். 

வழக்கு  விசா­ரணை  ஆரம்­பம்­மு­தலே   சந்­தேக நப­ரான  வைத்­தியர்  ஷாபியின் சட்­டத்­த­ரணி  நவ­ரத்ன  பண்­டா­ர­வுக்கும்  முறைப்­பா­ட­ளித்த  தாய்மார் சார்­பி­லான  சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும்  இடையே கடும் வாத­பி­ர­தி­வா­தங்கள்  இடம் பெற்­றன.  உயர்  தொனியில்  அவை  வாய்த்­தர்க்கம்  போன்று  வழக்கு  நெடு­கிலும்  நீடித்­தன.

முதலில்  பாதிக்­கப்­பட்ட  தரப்பு  சார்­பாக மன்றில்  ஆஜ­ரா­வ­தாக  காட்­டிக்­கொண்டு  சம்­மந்தம்  இல்­லாத தரப்­பினர் இவ்­வ­ழக்கில்  ஆஜ­ரா­வ­தா­கவும்  அதனால்  தனது  சேவை  பெறு­ன­ருக்கு   நியா­யத்தை  நிலை­நி­றுத்­து­வதில்  கடும் பாதிப்பு  ஏற்­ப­டு­வ­தா­கவும்  ஷாபி தரப்பு சட்­டத்­த­ரணி சுட்­டிக்­காட்­டினார்.

அதனால்  வழக்­குடன்  தொடர்­பு­ப­டாத  தரப்­பி­னரை மன்­றி­லி­ருந்து  வெளி­யேற்­றவும்  அவர்  கோரினார்.எனினும்  சிசேஷ்ட  பிரதி  சொலி­சிட்டர்  ஜெனரல்  துசித்  முத­லி­கேவின்  கருத்­தையும்  பதிவு  செய்த  நீதி­மன்றம்   அவ்­வா­றான  உத்­த­ர­வொன்றை  பிறப்­பிக்க  மறுத்­தது.

அத­னை­ய­டுத்து  சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர்  ஜெனரல் துசித் முத­லிகே    விசா­ர­ணை­களின்  தற்­பே­தைய  நிலை­மையை  மன்­றுக்கு  தெரி­வித்தார். 

சந்­தேக நப­ருக்கு  எதி­ராக  குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு  விசேட விசா­ர­ணை­களை  நடத்­து­கி­றது. கருத்­தடை  விவ­கா­ரத்தில்  615 முறைப்­பா­டுகள்  சி.ஐ.டிக்கு  கிடைத்த  நிலையில்  அதில்  கால எல்­ல­லையை  கருத்தில்  கொண்டு 147  முறைப்­பா­டுகள்  தொடர்பில்  விசேட  விசா­ர­ணைகள் நடக்­கின்­றது. குறித்த 147  முறைப்­பா­டு­க­ளையும்  தனித்­த­னி­யாக  ஆராயும்  போது  வைத்­தியர் ஷாபிக்கு  எதி­ராக  குற்­ற­வியல் சட்­டத்தின்  32 (1)அ  அத்­தி­யா­யத்தின் கீழ் நியா­ய­மான  சந்­தே­கத்தை  தோற்­று­விக்கும் கார­ணிகள் எவை­யு­மில்லை.  எனினும் தண்­டனை  சட்­டக்­கோ­வையின்  311ஆம்  அத்­தி­யா­யத்தின் கீழ் கடும் காயம் ஏற்­ப­டுத்தல்  தொடர்பில்  நாம்  விசா­ர­ணை­களை  நடத்­த­கின்றோம்.  

147  முறைப்­பாட்­டையும்  ஒன்­றாக  சேர்த்து நோக்­கு­கின்ற  பொழுது  இவ்­வாறு  கடும் காயம்  ஏற்­ப­டுத்­துதல்  தொடர்பில்  நியா­ய­மான  சந்­தே­க­மொன்று  எழு­கின்­றது. அத­னா­லேயே  தண்­ட­னை­சட்­டக்­கோ­வையின்  311ஆவது  அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ரணை  செய்­கின்றோம். எனினும்  இந்த விசா­ர­ணைகள்  அறி­வியல்  ரீதி­யான  சோத­னை­க­ளி­லேயே  தங்­கி­யுள்­ளது.  எனினும்  எச்.எஸ்.ஜி சோத­னைகள் உள்­ளிட்ட  அறி­வியல்  ரீதி­யான  பரி­சோ­த­னை­களை  முன்­னெ­டுக்க  நீதி­மன்றம்  தடை­வி­தித்­துள்ள  நிலையில்  இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது உள்­ளது. 

இதே­நேரம் சந்­தே­க­நபர் வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக சொத்து குவிப்பு தொடர்பில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. சொத்து குவிப்பு விவ­காரம் தொடர்பில் கறுப்பு பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. இவ்­வாறு சொத்து குவிப்பு விவ­கா­ரத்தில் விசா­ரணை செய்ய தேர்ச்­சி­ய­டைந்த மத்­திய வங்­கியின் உள­வுப்­பி­ரி­வுடன் நேரடி தொடர்பு உள்ள சி.ஐ.டி யின் நிதி குற்ற விசா­ரணை அறையின் மூன்றாம் இலக்க பொறுப்பு அதி­கா­ரி­யிடம் இந்த பொறுப்பு தற்­போது ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. 

பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரின் மேற்­பார்­வையில் இனிமேல் இந்த விவ­காரம் தனி­யான விட­ய­மாக விசா­ரிக்­கப்­படும். எனினும் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் அந்த விடயம் தொடர்­பிலும் நியா­ய­மான சந்­தே­கத்தை தோற்­று­விக்க  கார­ணிகள் எதுவும் வெளிப்­பட வில்லை என சுட்­டிக்­காட்­டினார். 

அதனை அடுத்த வைத்­தியர் ஷாபியின் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நவ­ரத்ண பண்­டார பிணை கோரிக்­கையை முன்­வைத்தார். ஷாபிக்கு எதி­ராக சுமத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டு மீளப்­பெ­றப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழான தடுப்பு காவல் உத்­த­ரவு மீளப்­பெ­றப்­பட்­டது. 

இந்­நி­லையில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் கூற்­றுப்­படி எனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக தண்­டனை சட்ட கோவையின் வரை­வி­லக்­கண பிரி­வான 311 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ரணை இடம்­பெ­று­கி­றது. இப்­ப­டி­யான பார­தூ­ர­மான காயம் ஏற்ப்­பட்­ட­தாக ஒரு வைத்­தியர் உறுதி செய்ய வேண்டும். அப்­படி அந்த வைத்­தியர் அறிக்கை கொடுத்­தி­ருக்­கிறார். இக்­குற்­றச்­சாட்டின் அடிப்­படை என்ன? இது பிணை வழங்க முடி­யு­மான குற்­றச்­சாட்டு. குற்­றச்­சாட்டு தொடர்பில் ஒரு­வரை அதி­கப்­பட்சம் 14 நாட்கள் மட்­டுமே விளக்­க­ம­றி­யலில் வைக்­கலாம். எனினும் எனது சேவை பெறுனர் அத­னையும் தாண்டி அனு­பி­வித்து விட்டார். எனவே அவரின் எந்­த­வொரு நிபந்­த­னையின் கீழும் பிணையில் விடு­விக்க கோரு­கிறேன் என்றார். 

அதனை அடுத்து விசா­ர­ணைக்கு தேவை­யான நான்கு உத்­த­ர­வுகள் சி.ஐ.டியில் பெறப்­பட்­டது. அதன் பின்னர் பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மொஹான் வீர­சே­கர , இந்­திர சிறி சேனா­ரத்ன , சானக மற்றும் பெனி பெர்­ணான்டோ ஆகியோர் தமது கருத்­துக்­களை பதிவு செய்­தனர். 

அவர்கள் ஷாபிக்கு பிணை வழங்க கூடாது என கோரினர். ஷாபிக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டுச் சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும் எனவும் இச்  சட்­டங்­களின் கீழான குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் சந்­தே­கங்­க­ளுக்கு சந்­தே­க­ந­ப­ருக்கு ஒரு­வ­ருக்கு பிணை­ய­ளிக்கும் அதி­காரம் நீதவான் நீதி­மன்­றுக்கு இல்லை எனவும் அவர்கள் வாதித்­தனர். 

இந்­நி­லையில் சந்­தேக நப­ருக்கு பிணை­ய­ளிப்­பது குறித்து சட்­டமா அதி­பரின் நிலைப்­பாட்டை நீதிவான் சம்பத் கேவா­வசம் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் துசித் முத­லி­கே­விடம் வின­வினார். 

 சந்­தே­க­ந­ப­ருக்கு எதி­ராக தற்­போது தண்­டனை சட்டக் கோவையின் 311 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ரணை நடக்­கி­றது. இது பிணை­வ­ழங்க முடி­யு­மான குற்­றச்­சாட்டு. இது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு அறி­வியல் ரீதியில் சாட்­சிகள் அவ­சியம். அத­னூ­டாக காயம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டமை உறுதி செய்­யப்­படல் வேண்டும். எனினும் இது­வரை அவ்­வா­றான சாட்­சி­யங்கள் இல்லை. அத்­துடன் புள்­ளி­வி­ப­ரங்­களை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணை­யொன்றும் அதில் அவ­சியம். அதற்­காக சுகா­தார அமைச்­சிடம் அறிக்கை கோரப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்கை கிடைக்கும் வரை மேல­திக விசா­ர­ணை­களை செய்ய முடி­யாது. இவ்­வா­றான பின்­ன­ணியில் சந்­தே­க­ந­ப­ருக்­கு­பிணை அளிக்க எமக்கோ,  சி.ஐ.டி.  பிரி­வி­ன­ருக்கோ எவ்­வித ஆட்­சே­ப­னையும் இல்லை என்றார்.

இந்த வாத பிர­தி­வா­தங்கள் மாலை 4. 30 மணி­ய­ளவில் நிறை­வ­டைந்த நிலையில் வைத்­தியர் ஷாபிக்கு  பிணை வழங்­குதா இல்­லையா என்ற தீர்­மா­னத்தை எடுக்க மாலை 5. 45 மணி­வரை வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. எனினும் தீர்ப்­பிற்­கான வழக்­கா­னது மாலை 6.48 மணி­ய­ளவில்  விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போது தனது தீர்­மா­னத்தை நீதவான் சம்பத் ஹேவா­வசம் நீதி­மன்ற சேவகர் ஊடாக  அறி­வித்தார்.

வைத்­தியர் ஷாபி முதலில் கடந்த மே மாதம் 24ஆம் திகதி குரு­நாகல் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட அவ­ருக்கு எதி­ராக அச்­சட்­டத்தின் கீழ் முதலில் குரு­நாகல் பொலிஸ் அத்­தி­யட்­சரின் அதி­கா­ரத்தில் 72 மணி நேர தடுப்பு  காவல் பெறப்­பட்­டது.பின்னர் அவரை  சி.ஐ.டி பொறுப்­பேற்ற நிலையில்  அச்­சட்­டத்தின் 9(1) பிரிவின் கீழ் மூன்று மாத தடுப்பு  காவல் பெறப்­பட்­டது. அந்த உத்­த­ர­வா­னது பாது­காப்பு அமைச்­சினால் சி.ஐ.டி.யின் கோரிக்­கைக்கு அமைய கடந்த 10ம் திகதி மீளப்­பெ­றப்­பட்­டுள்­ளது. 

அதன் படியே  கடந்த 11ஆம் திகதி சந்­தேக நபர்  மன்றில்  ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார். அன்­றைய தினம் மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடாக சி.ஐ.டி.யால் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் குற்­றச்­சாட்­டுக்கள் மீளப்­பெ­றப்­பட்­டன . எனவே அச்­சட்­டத்தின் கீழ் மீள சந்­தேக நபரை இவ்­வ­ழக்கில் தொடர்ந்து தடுத்து வைக்க முடி­யாது.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் துசித் முத­லிகே  தற்­போது சந்­தேக நப­ருக்கு எதி­ராக தண்­டணை சட்ட கோவையின் 311வது அத்­தி­யா­யத்தின் கீழ்  விசா­ரணை  நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் பிணை­வ­ழங்க  எதிர்ப்பு இல்லை எனவும் தெரிவித்து இருக்கின்றார். இந்நிலையில்  பாதிக்கப்பட்ட தரப்பு கூறுவதை போன்று  முறைப்பாட்டாளர்களால் குற்றம் சுமத்தப்படாத 2007ஆம் ஆண்டில் 57 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக சர்வதேச  இணக்கப்பாட்டு சட்டம் மற்றும் , பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் பிணை  வழங்க மறுக்க  எந்த அடிப்படை காரணிகளும் இல்லை. 

 கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் தனியான விசாரணைகள் நடக்கின்றன. சந்தேக நபர்  சாட்சியாளர்களுக்கோ, விசாரணையாளர்களுக்கோ இடையூறு ஏற்படுத்துவார்  என கருதும்  சூழல் இல்லை. சட்டமா அதிபரும்  பிணை  வழங்க  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவே சந்தேக நபரான வைத்தியர் ஷாபிக்கு பிணை வழங்க தீர்மானிக்கின்றேன். என நீதவான்  தனது தீர்மானத்தை அறிவித்தார். 

இதனை அடுத்து 2 இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும், 25 இலட்சம் ரூபா பெறுமதியான  நான்கு  சரீர பிணைகளிலும்  செல்ல வைத்தியர் ஷாபிக்கு அனுமதி வழங்கி நீதவான்  வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter