பேஸ் அப் குறித்து அவதானமாக இருங்கள்!

சமூக வலைதளங்களில் தற்போது  தீயாக பரவி வரும் பேஸ் அப் என்ற செயலியை பயன்படுத்தும் போது தங்களின் தனியுரிமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு  இலங்கையின் தகவல் தொழில் நுட்ப சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேஸ் அப் செயலியில் நமது தற்போதைய புகைப்படத்தை இந்த செயலியில் பதிவேற்றினால், நமக்கு வயதானால் எவ்வாறு எமது முகத்தோற்றம் இருக்கும் என இந்த செயலி மாற்றிக்காட்டும்.

இலங்கையில் இந்த செயலி தற்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. அனைவரும், இதில் தங்கள் தற்போதைய புகைப்படங்களை பதிவேற்றி வயதானால் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செயற்பாடுகள் தற்போது வைரலாக பரவிவருகின்றது.

இந்த பேஸ் அப் குறித்து இலங்கையின் தகவல் தொழில் நுட்ப சமூகத்தினர் கருத்து படி, குறித்த செயிலியை  உருவாக்கியவர்கள்,டுவிட்டரில் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்தனர்.

“இச்செயலியின் பயன்பாட்டை உருவாக்கியவர்கள் செயலியில் பயன்படுத்தும் படங்களை தங்கள் தரவுத்தளத்தில் எவ்வளவு காலம் சேமிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என  இலங்கையின் தகவல் தொழில் நுட்ப சங்கத்தின் தலைவர் ”ஆர்.வை குருவிடேஜ் மேத்யூ தெரிவித்துள்ளார்.

மேலும், இச் செயலியை பயன்படுத்துபவரின் கைத்தொலைபேசி கேலரியை, பயன்படுத்துபவரின் அனுமதியின்றி ஹேக்கர்களால் அணுக முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே இச்செயலியைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

‘பேஸ் அப் செலென்ஜ்’ என்ற செயலி அண்மையில் சமூகவலைத்தளங்களில் மிக வேகமாகப் பிரபல்யமடைந்திருக்கும் நிலையில், அந்த செயலியை பயன்படுத்தும் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் வகையில் குறித்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதா என்ற பாரிய சந்தேகம் எழுந்திருக்கிறது. 

ஏனெனில் இந்தச் செயலியை வடிவமைப்பதில் பங்காற்றிய நபரொருவர், குறித்த செயலியை உபயோகிக்க வேண்டாம் என்றும் அதனைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், தகவல்கள் வேறு தரப்பினரைச் சென்றடையும் வாய்ப்பிருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக எச்சரிக்கையொன்றைச் செய்திருந்தார். அதனையடுத்தே இதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் ஏற்பட்டது. எனவே தமது தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இத்தகைய செயலிகளைப் பயன்படுத்துவதையோ, அவற்றுக்குள் பிரவேசிப்பதையோ தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றோம்.

Check Also

வட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரை ஒன்றிணைக்க திட்டம்

பேஸ்புக் மெசஞ்சருடன் வட்ஸ்அப்பை ஒன்றிணைக்கும் புதிய திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் பரிசோதித்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இவ்வாறு இணைக்கும் போது …

Free Visitor Counters Flag Counter