கண்டி மாவட்டத்தில் எந்தவொரு தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை – ஹலீம்

கண்டி மாவட்டத்தில் தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை என்று தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

வக்பு சபையின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளி வாசல்களை பதிவு செய்வதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் அப்துல் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் தீவிரவாதம் கிடையாதென விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சிங்கள, பௌத்த மக்களுக்கு நியாயத்தை வழங்கி ஏனைய மக்களுக்கும் நியாயத்தை நிலைநாட்டுவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.(அ)

http://www.dailyceylon.com/184890/

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter