பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சான்றிதழ்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் online ஊடாக அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து 48 மணி நேரத்திற்குள் சான்றிதழ்கள் உங்கள் வீடுகளுக்கே கிடைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைதளமான www.doenets.lk என்ற இணைய தளத்தின் ஊடாக அல்லது 0112784323 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சான்றிதல் பிரிவை தொடர்பு கொள்ள முடியும் எனவும் 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter