1M சமூக இடைவெளியை பேணவேண்டுமாயின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – தனியார் பஸ் சங்கம் அதிரடி அறிவிப்பு

பேருந்து போக்குவரத்தில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணவேண்டுமாயின் தனியார் பேருந்து கட்டணத்தை தற்காலிகமாக 50 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும். தற்போதைய நிலையில் பேருந்துகளின் பயணிகள் அதிகளவில் ஒரே நேரத்தில் அதிகளவு பயணம் செய்வது பாதுகாப்பற்றது. ஆரம்ப கட்டணம் 20ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் அதிருப்தியளிக்கின்றன.

வீதிகளில் சமூக இடைவெளியை பேணி பேருந்துக்குள் நெருக்கமாகவும், கூட்டமாகவும் பயணிகள் பயணம் செய்வது நகைப்புக்குரியது.

அரசியல்வாதிகள் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படாமல் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நெருக்கடியான சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும்தீர்மானங்கள் அதிருப்தியளிக்கின்றன.ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் தனியார் பேருந்தகளில் பயணிகள்சமூக இடைவெளியை பேணி 1 மீற்றர் தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

பொது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு தனியார் பேருந்துகளில்சமூக இடை வெளியை கடைப்பிடித்தோம். இதனால் தனியால் பேருந்து உரிமையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டார்கள். அரசாங்கம் உரிய நிவாரணத்தை எமக்கு வழங்கவில்லை.

பொது மக்கள் வீதிகளில் சமூக இடைவெளியை பேணி பேருந்துகளில் நெருக்கமாகவும், கூட்டமாகவும் பயணிப்பது பயனற்றது. பொது போக்குவரத்தின் ஊடாகவே கொவிட்-19 வைரஸ் இரண்டாம் அலையாக தாக்கம் செலுத்தும் எனசுகாதாரஅமைச்சு சுகாதார சங்கத்தினரும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே பொது போக்குவரத்து தொடர்பில் முறையான நடவடிக்கைகளைகொவிட் 19 வைரஸ் முழுமையாக இல்லாதொழிக்கப்படும் வரையில் முன்னெடுக்குமாறு அரசாங்கத்திற்கும், போக்குவரத்து அமைச்சுக்கும் பல முறை எடுத்துரைத்தோம்.

ஊரடங்க சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் பேருந்தகளில் ஒரு ஆசனத்தில் ஒருவர் மாத்திரம் பயணம் செய்ய முடியும் என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டார்கள்.

இதன் பிரகாரம் ஒரு பேருந்தில் ஆரம்பத்தில் 25 பயணிகள் மாத்திரமே பயணம் செய்தார்கள். அப்போதும் சமூகஇடைவெளியை பேணவில்லை.பேருந்துகளில் 1 மீற்றர் சமூக இடைவெளியை பேண வேண்டுமாயின் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்குஎரிபொருள்விநி யோகத்தில்நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், அல்லது பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டோம். எக்காரணிகளுக்காவும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடியாது.எரிபொருள் நிவாரணம் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தவதாக போக்குவரத்து அமைச்சர் ஆரம்பத்தில் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அதனை மறந்து விட்டார். கொவிட் – 19 தொற்றாளர்கள் அதிகளவில் சமூகத்தின் மத்தியில் இருந்து அடையாளம் காணலாம் என சுகாதார சேவைகள்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஆகவே தனியார் பேருந்துகளில் கட்டாயம் பயணிகள் சமூக இடைவெளியை பேண வேண்டும். அரசியல்வாதிகள் தேர்தலை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படாமல் மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். என்பதை பல முறை தெரிவித்துள்ளோம்.

தனியார் பேருந்துகளில் சமூக இடைவெளியை பேண வேண்டும். இதனால் பேருந்து கட்டணத்தை50 சதவீதத்தினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். இதற்கமைய தற்போதைய குறைந்த பட்ச பேருந்த கட்டணம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்காவிடினும் பலவந்தமாகவாவது எமது தீர்மானத்தை செயற்படுத்துவோம்.

தற்போதைய நெருக்கடியான நிலையில் பொது போக்குவரத்து சேவை குறித்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றனதனியார் துறையினருக்கு சொந்தமான அதி சொகுசு பேருந்துகள் 640 தற்போதும் பயன்பாட்டில் ஈடுப்படுத்தாமல் உள்ளது. அப்பேருந்துகளை குறுகிய காலத்திற்கு சாதாரண பயண போக்குவரத்துக்கு ஈடுப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

நெருக்கடியான நிலையில் பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வித்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை. மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதுதனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினரது பொறுப்பாகும். முன்று ஆசனத்தில் மூவர் சமூக இடைவெளியை பேணாமல் அமர்ந்து செல்லும் போது வைரஸ் தொற்று பரலவடையாது என்பதற்கு எவர் உத்தரவாதம் வழங்குவார்கள் என்றார். வீரகேசரி பத்திரிகை (இராஜதுரை ஹஷான்)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter