மட்டக்களப்பு சுவர்ணமஹால் நிதி நிறுவனத்திற்கு சீல் வைப்பு 

மத்திய வங்கியினால் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் அமைந்துள்ள சுவர்ணமஹால் பினான்சியல் சேர்வீஸ் பி.எல்.சி நிறுவனத்தின் நிதி தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்தப்பட்டு அந்த நிதி நிறுவனத்தை இன்று திங்கட்கிழமை (13) மத்திய வங்கி பூட்டி சீல் வைத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணையசபையானது 2020 யூலை 10 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திற்கு அமைய 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி தொழில் சட்டத்தின் 31 ஆம் பிரிவின் கீழ் 2020 யூலை 13 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்வீஸ் பி.எல்.சி நிறுவனத்தின் நிதி தொழில் நடவடிக்கைகளை இடை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதன் காரணமாக ஈ.ரி.ஜ, பினாஸ் லிமிட்டட் மற்றும் சுவர்ணமஹால்  சேர்வீஸ் பி.எல்.சி ஆகியன கடன் தீர்வற்றநிலையை அடைந்தன.

இந்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபை மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவமானது இத்தகைய குறைபாடுகளை chap முறையில் கையாளத் தவறியமையினால் இவ்விரு நிறுவனங்களின் அலுவலகம் மற்றும் பணிப்பாளர் சபையின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையிலான பணிப்புரைகளை நாணையச்சபையானது 2018 ஜனவரி 2 ஆம் திகதி வழங்கியது. 

மேலும் இவ்விரு அலுவலகங்களை மேற்பார்வை செய்வதற்காக நாணயச்சபையினால் முகாமைத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் ஒவ்வொரு நிறுவனத்தினதும் 10 வீதம் வரையிலான வைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீள் செலுத்தக் கூடியதாக இருந்தது. 

நாணையச் சபையினால் இந்த நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்காக பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவு செய்ய இந்த நிறுவனங்களின் பணிப்பாளர்கள் வேண்டப்பட்ட போதிலும் பொருத்தமான முன்மொழிவுகள் ஏதுவும் செயற்படுத்தப்படவில்லை இதனால் இரு நிறுவனங்களின் நிதி நிலைமை வீழ்சியடைந்தது.

இதனால் நிறுவனங்களின் வைப்புக்கள் முதிர்சியடைந்த போதிலும் அதனை மீள் செலுத்த முடியாத நிலை காணப்பட்ட இருப்பினும் ஈ.ரி.ஜ, பினாஸ் லிமிட்டட் மற்றும் சுவர்ணமஹால்  சேர்வீஸ் பி.எல்.சி நிறுவனங்களின் நிதி தொழில் இடைநிறுத்தல் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் வைப்பு காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவு திட்டமானது பொருத்தமான ஒழுங்கு விதிகளின்படி காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீடுகளை செலுத்துவதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும், 

இதனடிப்படையில் 75 வீதமான வைப்பாளர்கள் வைப்பிலிட்ட முழுத்தொகையையும் (38,111 மொத்த வைப்பாளர்களுள் 28.554 வைப்பாளர்கள்) எஞ்சிய 25 வீத வைப்பாளர்கள் (9,557 வைப்பாளர்கள்) அவர்களினது வைப்பு தொகையில் ஒருபகுதியாக 600.000 வரை பெற்றுக் கொள்ள முடியும்.

சுவர்ணமஹால் சேர்வீஸ் பி.எல்.சி மொத்த வைப்பாளர்களில் 89 வீத ஆன வைப்பாளர்கள் வைபிலிடப்பட்ட முழுத்தொகையையும் (8.726 மொத்த வைப்பாளர்களுள் 7.802 வைப்பாளர்கள்) எஞ்சிய 11வீத வைப்பாளர்கள் (924 வைப்பாளர்கள்) அவர்களின் வைப்புத் தொகையில் ஒரு பகுதியாக ரூ 600,000 பெற்றுக் கொள்ள முடியும்.    

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி தொழில் சட்டத்தின் 31 ஆம் பிரிவின் கீழ் 2020 யூலை 13 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்வீஸ் பி.எல்.சி நிறுவனத்தின் நிதி தொழில் நடவடிக்கைகளை இடை நிறுத்துவதற்கு தீர்மானித்து  சீல் வைக்கப்பட்டுள்ளது. -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter