ஸ்ரீ.மு.கா. எனும் பேரியக்கத்தை எந்தப் பூச்சியாலும் அழிக்க முடியாது ; றவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை எந்தப் பூச்சியாலும் அழித்துவிட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஏறாவூரில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சரின் அலுவலக கேட்போர் வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம்,

வண்ணாத்திப் பூச்சியின் ஆயுள் மிகக் குறைவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கருவறுக்கப் புறப்பட்ட கூட்டம் எதைப் பற்றி விமர்சித்தாலும் அதனை முஸ்லிம்கள் பொருட்படுத்த மாட்டார்கள். வேறுவழியின்றி அவர்கள் தங்களது ஆற்றாமையினால் கொக்கரித்துத் திரிகிறார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கருவறுக்க நினைத்த கூட்டம் எத்தனையோ கொப்புகளில் தாவி தாவி கடைசியாக இப்பொழுது வண்ணாத்திப்பூச்சி வடிவமெடுத்துள்ளார்கள்.

வண்ணாத்திப் பூச்சியின் ஆயுள் குறைவு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும் .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க எத்தனை பூச்சிகள் உருவாகினாலும் அது ஒரு பலமான பேரியக்கம். அதனால் அக்கட்சியை அழிக்க முடியாது. அதன் வியூகங்கள் விசாலமானவை.

ஜனாதிபதித் தேர்தலில் வென்றவர்கள் இலகுவாக பாராளுமன்றத்தில் வென்று விடுவார்கள் என்று அர்த்தமல்ல.

1999ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றி பெற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் ஆட்சியைமக்க முடியவில்லை. அந்தத் தேர்தலில் நாம் 11 ஆசனங்களைக் கொண்டிருந்தோம்.

இந்தப் பேரியக்கமான இந்தக் கட்சியிலே இருந்து அந்தஸ்தை அடையக் கூடிய வாய்ப்புக்கள் எல்லோருக்கும் நிறையவே இருக்கின்றன.

அது உள்ளுராட்சி மன்றங்களிலே, மாகாண சபையிலே பாராளுமன்றத்திலே என்று பல்வேறு அந்தஸ்துகளை அடையக் கூடிய வாய்ப்புக்கள் திறந்தே இருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உருவாகியிருக்கிற உற்சாகம் தான் இலங்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அந்தஸ்தை பாராளுமன்றத்திலே பிரகாசிக்கச் செய்யும்.

மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸைத் தவிர வேறு கட்சிகளில் போட்டியிடும் வேறு யாருக்கும் மட்டக்களப்பில் முஸ்லிம் பாராளுமன்ற ஆசனம் இல்லையென்பது உறுதியாகிவிட்டது.

மட்டக்களனப்பில் முன்னர் அதிகூடிய 52 ஆயிரம் வாக்குகள் பெற்ற வரலாற்றுச் சாதனையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நிரூபிக்கும் எனத்  தெரிவித்தார். -வீரகேசரி பத்திரிக்கை-

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter