இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா – 2,511

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,511 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குறித்த 43 பேரில் 13 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்கள் எனவும், ஏனைய 30 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 520 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Ada Derana

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter