இரண்டாக இருப்பதை மூன்றாக அதிகரிப்பதே எமது நோக்கம் – இஸ்திஹார்

ஒரு கப்பலுடைய பயணத்திலே அந்த மாலுமி ஆளுமை தான் மிக முக்கியமாகும். ஆகவே ஒரு ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் இணைந்து தான் முஸ்லிம்கள் பயனிக்க வேண்டும். ஆகவே இந்த முறை உங்களுக்குத் தெரியும். இன்று வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு இன்று தொலைபேசியின் உடைய ஒவ்வாரு வயர்களும் உடைய துண்டிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இப்படியான ஒரு அணியுடன் முஸ்லிம்கள் கைகோர்த்து எதிர்காலத்தை வீணாக்குவது நிச்சயமாக இந்த சமூகத்தின் இருப்பை இன்னும் கேள்வி குறியாக்கும்.

ஆகவே இந்த முறை தைரியமாக நாங்கள் இந்த சுயேட்சை குழுவூடாக வைர சின்னத்திலே கண்டி மாவட்டத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். நிச்சயமாக எஎங்களுக்கு எந்த விதமான தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இல்லை.

எங்களுடைய பிரதேச சபையில் 28 வருட காலமாக தொடர்ந்தும் பணியாற்றுபவர்கள் இன்றும் காணப்படுகின்றனர். அங்கு உள்ளவர்கள் தங்களது சரியாக பணிகளை செய்தாலும் அல்லது செய்யாவிடிலும் கூட தொடர்ந்தும் அவ்விடத்திலேயே பணியாற்றுகின்றனர். தங்களுடைய சொந்த சொத்துக்களை போன்று தம் அடுத்த பரம்பரையினரும் அந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். சமூகத்திற்காக பாடுபடுபவர்களுக்கு ஒருபோதும் அங்கு வாய்ப்புகள் இல்லை. இவைகள் அனைத்தும் தற்காலத்திலும் கூட நடைபெற்றே கொண்டிருக்கின்றது.

இந்த கட்சி அரசியலை சமூக அரசியலாக மாற்ற வேண்டும். அஅதற்காக 2013 இலிருந்து அக்குறணையை மையமாக கொண்டு பாடுபட்டு வருகின்றோம். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் நாம் சுயேட்சைக்குழு ஒன்றாக கலந்துரைத்தோம்.

குறைபாடுகள் உள்ள கட்சிகளுக்கு எதனை சாதிக்க முடியும் என்று கூறப்பட்டது கூறுவதும் சாத்தியம். அதற்கு நாங்கள் கூறினோம், எங்களுக்கு நான்கு நபர்கள் கிடைத்தால் இந்த தவிசாளர் பதவியை கைப்பற்றுவோம். என தெளிவாக மக்களிடம் கூறினோம், எங்களை நம்பி 5000 நபர்கள் வாக்குகளை தந்தனர். அதன் பின் தவிசாளர் பதவியை எடுத்தோம், அதுமட்டுமல்லாது 30 வருடமாக அக்குறணையிலும் தவிசாளர்கள் இருந்ததை அனைவரும் அறியும், ஜனாதிபதிக்கு வேண்டியவர்கள் தான் அக்குறணையில் தவிசாளர்களாக காணப்பட்டனர்.

அவர்கள் யாராலும் சாதிக்க முடியாத பல வேலைகள், பல செயற்பாட்டு திட்டங்கள், சில சமூகத்தின் மாற்றங்களை எங்களால் கொண்டு வர முடிந்தது. இவைகள் கட்சிக்காக உழைக்கப்போனால் மட்டும் தான், கட்சியை விட்டு நாம் சமூகத்தை கவனிக்க வேண்டும். அக்குறணை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், அதற்கு எங்களால் முடிந்த தீர்வுகளை கொடுத்தோம் அதேபோன்று எங்களால் கொடுக்க முடியாத தீர்வுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களுடன் கலந்துரையாடி முடியுமான அளவிற்கு தீர்வுகளை பெற்று கொடுத்தோம்.

2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சபையை அறியப்படுத்தினோம். அதில் தலைவராக நானே கடமையாற்றினேன். இந்த இரண்டு வருடங்களுக்குள்ளே உங்களுக்கு வித்தியாசம் விளங்குகின்றதா? இல்லையா?

ஏதோ ஒரு வகையில் சமூக மாற்றத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். உண்மையாக பிரதேச சபையை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கே செய்ய முடியும். இன்னுமொரு பெரிய பிரச்சினை உள்ளது. 2000-2015 ம் ஆண்டு வரையும் எமது கண்டி மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து 3 முஸ்லிம் நபர்கள் பாராளுமன்றத்திற்கு சென்றனர். 2010 ல் மாத்திரம் 4 நபர்கள் சென்றனர், அதனை தவிர மற்றைய தேர்தலில் 3 நபர்கள் சென்றுள்ளனர். இதனை 2015 இல் இரண்டாக குறைத்தார்கள். அந்த தருணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைகிறது என்று யாருமே கூறவில்லை.

இன்று நாம் வைரம்(diamond) சின்னத்தில் கலமிரங்கியிருக்கின்றோம். காரணம் இரண்டாக இருக்கும் மூன்றாக அதிகரிக்கவே!

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter