இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung, நாட்டில் முதலாவது foldable ஸ்மார்ட் ஃபோனினை அறிமுகப்படுத்தியதன் மூலம் வரலாறு படைத்துள்ளது. இலங்கையில் முதலாவது foldable device ஆன Galaxy Z Flip, புத்தாக்கம் மற்றும் வடிவமைப்பு ஆகிய இரண்டும் கலந்த கலவையாகும். இது இளைஞர்களுக்கும் உயரடுக்கு ஸ்மார்ட் ஃபோன் பாவனையாளர்களுக்கும் உகந்தது ஆகும். இது தனியுரிமம் பெற்ற மெல்லிய கண்ணாடி (Ultra Thin Glass (UTG) மற்றும் hideaway hinge போன்ற நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. Galaxy Z Flip ஆனது உண்மையிலேயே தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களில் ஒரு மைல்கல்லாகும். உயரடுக்கு வாழ் சிலருக்கு விருந்தாக அமையும் இச்சாதனத்தின் மட்டுப்படுத்தப்பட்ட தொகுதிகள் தற்போது கொண்டுவரப்பட்டு முதலில் வருபவருக்கு முதலில் வழங்கப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான முதல் அனுபவத்தினை One Galle Face Mall, ODEL Alexandra Place, Samsung Concept Store, Colombo 05, மற்றும் Dialog Iconic ஆகிய இடங்களில் ஜூன் 8 ஆம் திகதி முதல் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் ஜூன் 12 – 14 வரையான மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் Samsung இன் அனுமதிபெற்ற பங்காளர்களான: JKOA online, mysoftlogic.lk, Singer online, Keells online, Damro, Singhagiri மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு நாடு முழுதும் உள்ள அனுமதி பெற்ற Softlogic Mobile விநியோக முகவர்களிடமும் மற்றும் online பங்காளியான Daraz மற்றும் வலையமைப்பு பங்காளிகளான டயலொக் மற்றும் மொபிடெல் இடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு முறை திரையை (screen) மாற்றிக்கொள்ளக்கூடிய சலுகையுடனும் வட்டியற்ற இலகு தவணைக் கட்டண திட்டத்துடனும் இணைந்ததோர் தொகுப்பாக Galaxy Z Flip வருவதனால் ஓர் பெறுமதிமிக்க சலுகையாகவும் இதன் முன்னணி தொழில்நுட்பத்துக்காக அவசியம் வைத்திருக்க வேண்டிதொன்றாகவும் இதனை ஆக்குகிறது.
இதன் அறிமுகம் பற்றி Samsung Sri Lankat வின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கெவின் சங்சு யூ கருத்து தெரிவிக்கையில்ரூபவ் ´ எமது புத்தாக்கம்மிக்க தொழில்நுட்பத்தினை நிலைத்திருக்கச் செய்திடும் விதத்தில் இலங்கையில் முதலாவது foldable phone – Galaxy Z Flip இனை அறிமுகப்படுத்துவதில் Samsung பெருமகிழ்ச்சியடைகிறது. இதன் தனித்துவமான foldable தொழில்நுட்பம் உங்கள் பர்ஸ் இனைப் போல் பாக்கெட்டுக்குள் நழுவிச் செல்லக்கூடிய விதத்தில் ஃபோனினை அனுமதிக்கிறது. Galaxy Z Flip இன் hideaway hinges, மகிழ்ச்சியூட்டிடும் எல்லையற்ற infinity flex display இனை வழங்குவதால் Samsung இன் சாத்தியமற்றது என்ற வரையறையை எவ்வாறு தள்ளி வைக்கிறது என்பதனை இது பிரதிபலிக்கிறது. இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung இன் முன்னணி வகிக்கும் தொழில்நுட்பம் எப்போதும் இங்குள்ள வாடிக்கையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மேலும் Galaxy Z Flip விற்பனைக்கு வருவதற்கு முன்னரே அதைக் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தினையும் உற்சாகத்தினையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.´ எனத் தெரிவித்தார்.
Z Flip வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள 0117 540 540 என்ற Galaxy பிரீமியர் சேவை உடனடி அழைப்பு எண்ணுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது தங்கள் விசாரணைகளை 24 மணிநேரம் செயற்படும் Samsung Members இல் போஸ்ட் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான உதவிகளையும் நிகழ் நேர தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.