வழிபாட்டுத் தலங்களை மீள திறப்பதற்கு அனுமதி

வழிபாட்டுத் தலங்களை இன்று முதல் மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்புடன் சமூக இடைவெளியை பேணியவாறு எந்தவொரு வழிபாட்டுத் தலத்திலும் அனுமதிக்கப்படக்கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், சமூக இடைவெளியை பேணியவாறு 50 பேர் கூடியிருக்க இடவசதியற்ற வழிபாட்டுத் தலங்களில், வழமையாக அங்கு கூடியிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையிலானோரை மாத்திரமே அனுமதிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 ஐ தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை அனைவரும் முழுமையாக பின்பற்றவேண்டிதற்கு அமையவே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மதஸ்தலங்களை இன்று முதல் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வக்பு சபை இது குறித்து சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

நேற்று கூடிய இலங்கை வக்பு சபை கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அனுமதிக்கேற்ப பள்ளிவாசல்களில் ஏற்கனவே கூடுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள 30 என்ற எண்ணிக்கை ஆகக் கூடியது 50 நபர்கள் என அதிகரிக்கப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழுகை நடக்கக்கூடிய பள்ளிவாசல்கள் சிறியதாக இருந்தால் அந்த பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களின் எண்ணிக்கையில் 50 வீதமானவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

சுகாதார அதிகாரிகள் கூட்டுத் தொழுகைக்கோ, கூட்டு நடவடிக்கைகளுக்கோ இதுவரையில் அனுமதி வழங்கவில்லை.

இதன் காரணமாக ஐவேளை இமாம் ஜமாஅத் , ஜும்ஆத் தொழுகை, நிகாஹ் மஜ்லிஸ் உள்ளிட்ட எவ்வித கூட்டு நடவடிக்கைகளுக்கும் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்படமாட்டாது.

பள்ளிவாசல்களை மக்களுக்காக திறப்பதற்கு முன்னர் அனைத்து நம்பிக்கையாளர்களும், நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் பொது சுகாதார பரிசோதகரின் எழுத்து மூல அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டுமென பணிக்கப்படுவதாகவும் இலங்கை வக்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter