இறுதியாக உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட்-19 காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

அண்மையில் குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் குருணாகலை – ரிதிகம பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார்.

இதனடிப்படையில் கொவிட்-19 காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றுதியான 13 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா தொற்றுறுதியானவர்களில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேர் கடற்படை சிப்பாய் என தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுறுதியான மேலும் 20 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறுதியான 822 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter