உயிரிழந்தவர் மீண்டும் வந்ததால் பிரதேசத்தில் பெரும் குழப்ப நிலை

கொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்தவர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மீகொட நடுஹேன, முத்துஹேனலம்தை வீதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் அவர் பிரதேசத்திற்கு வந்தமையினால் மக்கள் அச்சமடைந்து, அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மீகொடை, நடுஹேன, முத்துஹேனவத்தை வீதி பிரதேசத்தில் இரவு 11.45 மணியளவில் மேஜர் ஒருவர் பயணித்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த வரை மேஜர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் அவரின் நிலைமை ஆபத்தாக இருந்தமையினால் அன்று இரவே கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி உயிரிழந்தவரின் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதி செய்ய முடியாமையினால், எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு அந்த பிரசேத்தில் உள்ளவர்களிடம் வினவியுள்ளார். அதனை பார்த்தவர்கள் புகைப்படத்தில் இருப்பவர் களுத்துறை மாமா என குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் களுத்துறை மாமா என்ற 79 வயதுடையவரின் 6 பிள்ளைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு சடலம் பொலிஸாரினால் காண்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தனது தந்தை என மகனினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவரின் சடலம் கடந்த மாதம் 17ஆம் திகதி குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் 18ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை பேய் என நினைத்த மக்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்திற்கு
அழைத்து சென்றுள்ளனர். அத்துடன் அவரது பிள்ளைகளையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter