ஷோரூம்களில் பதிவு செய்யப்படாத 20,000 வாகனங்கள்

கொரோனா வைரஸ் பிரச்சினைகளால் இலங்கையில் லோக்-டவுன் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளின் விளைவாக பதிவு செய்யப்படாத (Unregistered) சுமார் 20,000 வாகனங்கள் ஷோரூம்களில் சும்மா இருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது.

“பதிவு செய்யப்படாத (unregistered), புத்தம் புதிய (Brand-new) மற்றும் மறுசீரமைக்கப்பட்ட (recondition) வாகனங்கள் தற்போது இலங்கை முழுவதும் உள்ள ஷோரூம்களில் நிறுத்தப்பட்டுள்ளன” என்று இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முறையான மோட்டார் வர்த்தகத் துறையில் கோவிட் -19 தொற்றுநோய் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, 25,000 க்கும் மேற்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் அதிகப்படியான கடன்களை திருப்பிச் செலுத்தவேண்டிய நிலை, துறைமுகங்களில் வாகனங்களை எடுக்க இயலாமை மற்றும் வாகனங்களின் விலைகள் 10% -15% அதிகரிப்பு போன்ற விடயங்களால் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகக் அவர் கூறினார்.

“ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்கப்பட்ட சுமார் 6000 வாகனங்களில் பெரும்பாலானவற்றை எங்களால் கிளியர் பண்ண முடிந்தது, ஆனால் இன்னும் 1500 வாகனங்கள் எஞ்சியுள்ளன, இறக்குமதியாளர்களுக்கு தேவையான குறுகிய கால கடன்களை ( Short Term Loans) பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதாலேயே இந்த நிலை” என்று பீரிஸ் கூறினார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்க பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதுவதாக அவர் கூறினார்.

“இறக்குமதி தடையை நீக்க நாங்கள் கேட்கவில்லை. லெட்டர் ஆஃப் கிரெடிட்டில் (Letters of Credit) உயர் எல்லையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் தடையை எளிதாக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உயர் எல்லையானது 100%, 200% அல்லது அதற்கு மேற்பட்டதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க முடியும், ”இது வாகன இறக்குமதி மற்றும் அந்நிய செலாவணி வெளியேற்றங்களை அதிக அளவில் அரசாங்க கட்டுப்பாட்டில் அனுமதிக்கும் என்று குறிப்பிட்டார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter