ஆபத்தில்லாத பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள்

ஆபத்தானவையாக கண்டறியப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் நடத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளை நடத்துமாறு சுகாதார சேவைகள் ஆலோசனை வழங்கியுள்ளன.

இந்த ஆலோசனைகளுக்கு அமைய சேவைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், வேலைக்காக செல்லும் அரச-தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியம் அற்ற தேவைகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது.

நிலைமை சீரடையும் பட்சத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரயில் சேவையில், முன்பதிவு இன்றி அலுவலகம் நோக்கி பயணிக்கும் அரச-தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவுடன் கூடிய பயணிகளுக்கு வசதிகள் வழங்கும் முறை அமுலாக்கப்பட்டது. எனினும், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஒன்பதாயிரம் பேர் வரை மாத்திரமே ரயில்களில் பயணித்திருக்கிறார்கள்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter