Video – நாடு முழுதும் 17ம் திகதி முழுமையான ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டதன் பின்னர் மே மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEO LOADING…

https://www.facebook.com/hirunews/videos/248659289544942

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter