சஹ்ரானை பயன்படுத்தியதை போன்று கொரோனாவை பயன்படுத்தி தேர்தலை வெற்றிபெற முயற்சி

சஹ்ரானை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொண்ட அரசாங்கம் கொரோனா வைரஸை பயன்படுத்தி பொதுத்தேர்தலை வெற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவசேனசிங்க, இனவாதத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை வெற்றிக் கொள்ளும் அரசாங்கம், சிறுபான்மை உறுப்பினர்கள் தம்முடன் இணைந்தால் நல்லவர்கள் எனவும், வேறு கட்சிகளுடன் இணைந்தால் தேச துரோகிகள் எனவும் முத்திரைக்குத்தி வருவதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டணி இணைந்துக் கொண்டமையினால், அரச தரப்பிணர் அவர்களின் புகழைப்பாட ஆரப்பித்துள்ளனர்.

இவர்கள் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டிருக்காவிட்டால், இவர்களை பயங்கரவாதிகள் என்றும்  தேச துரோகிகள் என்றும் விழித்திருப்பார்கள். முஸ்லிம் உறுப்பினர்கள் மத இனவாதத்தை கக்கும் இவர்கள் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா, ஹக்கிம் ஆயோர் இவர்களுடன் இணைந்தால் அவர்கள் சிறந்தவர்களாக காண்பிப்பார்கள்.

ரிஷாட் பதியுர்தீன் கடந்தகாலத்தில் இவர்களுடன் இணைந்திருந்த போது அவர் பயங்கரவாதி கிடையாது. இந்த சிறுபான்மை உறுப்பினர்கள் இவர்களுடன் இல்லாது ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டாலோ வர்களை துரோகிகளாகவே அரச தரப்பிணர் காண்ப்பித்து வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க பிரதமர் மஹிந்த ராஸபக்ஷவின் அரவணைப்பில் இருக்கின்றமை அனைவரும் அறிவார்டகள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை துரோகி என்றவர்கள் தற்போது அவர்களுடன் இணைத்து செய்படுகின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் போது எம்மீதும் பாரிய விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் எமக்கு வழங்கப்பட்ட அமைச்சு பொறுப்புகளில் நாங்கள் எந்தவித ஊழலையும் செய்யவில்லை. நியாயமான முறையில் செயற்படவே எப்போதும் முயற்சித்துள்ளோம்.

ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்தபோது எம்மீது விமர்சனங்கள் எழுந்ததை அடுத்தே. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் நாங்கள் பிரிந்து வந்துள்ளோம்.

எந்தவித குற்றச்சாட்டுகளும் அற்றவர்கள் அனைவரும் சஜித்தின் தலைமைத்துவத்தில் ஒன்றுக்கூடி மோசடிகள் அற்ற நல்லாட்சியை மேற்கொள்ள எதிர்பார்த்திருக்கிறோம். மக்களுக்கு எம்மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் எம்மை தாராளமாக நிராகரிக்கலாம். மக்களே சிறந்த தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும்.

(செ.தேன்மொழி)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter