206 ஆவது கொரோனா தொற்றாளரே, இலங்கையில் கொரோனா அதிகளவில் தொற்ற காரணம்

தென் கொரியாவில் 32 ஆவது கொரோனா தொற்றாளரே தென்கொரியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைய காரணமாய் இருந்தார்.

61 வயதுடய பெண் 9000 நபர்கள் கலந்துகொண்ட சமய வழிபாட்டு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டமையினாலேயே 3000 நபர்களுக்கு கொரோணா வைரஸ் தொற்றியது.

அதே போன்று இலங்கையில் அண்மை காலமாக கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைய காரணமாய் இருந்தவர் இலங்கையில் 206 ஆவது கொரோணா தொற்றாளர் ஆகும்.

அறிக்கைகளின் படி, 206 ஆவது கொரோனா தொற்றாளர் போதை பொருளுக்கு அடிமைப்பட்டவரும், சுதுவெல்ல பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி வீடொன்றில் திருடச் சென்ற நேரத்தில் பிடிப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் அவரை பிடித்து பொலிஸாருக்கு ஒப்படைத்ததோடு, இவர் கொரோணா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரிய வந்தது.

பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று (28/04/2020) காலை தொலைக்காட்சி நேரடி சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், சுதுவெல்ல பிரதேசம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதோடு, அவரை பிடித்தவர்கள் மற்றும் பமுனுகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோணா வைரஸ் தொற்றும் அபாயம் இருந்தது.

முடக்கப்பட்ட சுதுவெல்ல பிரதேசத்தில் கடமையிலிருந்த கடற்படை வீரர்களே இவ்வாறு கொரோணா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நம்பப்படுகிறது.

வெலிஸர முகாமில் தங்கியிருந்தவர்கள் மூலமாகவே மற்றைய அதிகாரிகளுக்கும் கொரோணா வைரஸ் பரவியிருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

சமூக பொறுப்பின்றி செயற்பட்ட இலங்கையில் 206 ஆவது கொரோணா தொற்றாளரின் மூலமாகவே இவ்வாறு இலங்கையில் அதிகளவான கொரோணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter