அமானா வங்கியின் நிதி உதவி மீளச்செலுத்தலுக்கான கால அவகாச நிவாரணம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், ஏனைய வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பணிப்புரைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் அவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், Covid-19 தொற்றுநோய் பரவலின் விளைவாகத் தோன்றியுள்ள நிதி மற்றும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், அமானா வங்கி விசேட கால அவகாச நிவாரணச் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த நிவாரணச் சலுகையானது தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், வியாபார வாடிக்கையாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் வங்கியின் வலைத்தளம் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

If your are an individual customers
தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் bit.ly/AmanaBankMoratorium இல் கிடைக்கும் வலைத்தளப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

If you are a business entity please refer your request to your Relationship Manager or Branch Manager.
வியாபார வாடிக்கையாளர்கள் covid19relief@amana.lk என்ற மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பிப்பதுடன், தத்தமது கிளை முகாமையாளருடன் அல்லது உறவு முகாமையாளருடன் தொடர்புகொள்ள வேண்டும். நிவாரணம் கோரும் சகல வேண்டுகோள்களும் 2020 ஏப்ரல் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன் வங்கிக்குக் கிடைக்க ஆவணை செய்ய வெண்டும்.

மேற்படி விசேட நிவாரணத்தைத் தவிர, அமானா வங்கி அதன் தங்க நகை பாதுகாப்பு வசதி  வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பெற்ற நிதி வசதியை மீளச்செலுத்துவதற்கு மேலதிக கால சலுகை அவகாசத்தையும் வழங்கியுள்ளது. அதாவது, நிதி வசதியை மீளளிப்பதற்கான காலம் 2020 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தமது வங்கி நடவடிக்கைகளை அதிக சிரமம் இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்வதற்கும் அமானா வங்கி ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சம்பளத்தைக் கிரமமாக வங்கியில் வைப்புச் செய்யும் வாடிக்கையாயர்களுக்கு சம்பள முற்பணம் வழங்கும் வசதி, இணையத்தள வங்கிச் சேவை வசதி, இணையத்தளத்தின் ஊடாக ஏனைய வங்கிகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்யும்போது விதிக்கப்படும் கட்டணத்திலிருந்து விலக்களிப்பு, தற்போதய கஷ்டமான சூழ்நிலையில் வாடிக்கையாளர்களை அணுகுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Bank on Wheels  என்ற நடமாடும்  ATM சேவை என்பன இந்த ஏற்பாடுகளுள் அடங்கும்.

வங்கியின் நிவாரண நடவடிக்கைகள் பற்றி பிரதம நிறைவேற்று அதிகாரி மொகமட் அஸ்மீர்  கருத்து வெளியிடுகையில், “நிகழும் தற்போதைய இக்கட்டான சூழலில் எமது சகல வாடிக்கையாளர்களினதும் பாதுகாப்பு மற்றும் நிதி நலன்களை உறுதி செய்வதற்கு அமானா வங்கி தன்னாலியன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். மனிதாபிமானத்தை முதன்மையாக கொண்ட தனித்துவமான அணுகுமுறையில் நிவாரணைகளை வழங்குவதன் மூலம் இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவுவதே எங்கள் நோக்கமாகும்” என்று கூறினார்கள்.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும்.

ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட IDB குழுமம் பிரதான பங்குதாரா; என்ற முறையில் அமானா வங்கியில் 29.97%  பங்குளைக் கொண்டுள்ளது. IDB குழுமம் ‘AAA’  தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி சார்ந்த நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. ஃபிச் ரேட்டிங்ஸ் அமைப்பு 2019 ஜூன் மாதத்தில் அமானா வங்கியின் BB(lka) என்ற தேசிய நீண்டகாலத் தரப்படுத்தலையும் சாதகமான கண்ணோட்டத்தையூம் ஊர்ஜிதம் செய்தது.

‘OrphanCare’  நம்பிக்கைப் பொறுப்பகத்தைத் தவிர, அமானா வங்கிக்கு அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் உப நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் எதுவும் கிடையாது.  

அனைத்து கோரிக்கைகளும் 2020 ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter