Akurana – Lockdown பகுதியில் அவசரமான மருத்துவ தேவை ஏற்பட்டால்

• முழுமையாக lockdown செய்யப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு – மிக அவசரமான மருத்துவ நிலைமைகள் ஏற்பட்டால், உடனடியாக 1990 எனும் இலக்கத்தையோ, MOH அதிகாரியையோ, அவ் இரு இலக்கங்களும் வேலை செய்யாதிருந்தால் போலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும். அவர்கள் உங்களுக்கான ஏற்பாடுகளை செய்து தருவார்கள். அதுவும் முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் உங்களது தனிப்பட்ட வாகனங்கள் மூலம் அக்குறணை ஸியா வைத்தியசாலையை நாடலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

• அக்குறணையின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், மிக அவசரமான மருத்துவ நிலைமைகள் ஏற்பட்டால், உடனடியாக 1990 எனும் இலக்கத்தை அழைக்கவும். அவ்வாறு தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாது போகும் பட்சத்தில், உங்களது தனிப்பட்ட வாகனங்கள் இருப்பின் அவற்றைப் பாவிக்க முடியும். ஆனால், இது மிகவும் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், முதலில் ஸியா வைத்தியசாலைக்கு செல்லுமாறு கேட்கப்படுகிறீர்கள். அதன் பிறகுள்ள ஏற்பாடுகள் பற்றிய அறிவுறுத்தல்கள் அங்கு வழங்கப்படும்.

• கண்டி, பேராதனை, மாத்தளை போன்ற வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் நோயாளிகளும், அவர்களோடு தங்கியிருப்பவர்களும் வைத்தியசாலை வளாகத்தில் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

• Dialysis செய்ய வேண்டிய நோயாளிகள் போலீசாருடன் தொடர்பு கொண்டு அதற்குத் தேவையான pass ஐப் பெற்றுக் கொள்ளலாம்.

• Clinic புத்தகங்களை கையளித்தோர் பலரது clinic புத்தகங்கள் மருந்துகளுடன் நேற்றும் இன்றும் வந்து சேர்ந்துள்ளன. அவை development officers (DO) ஊடாக வழங்கப்பட்டும் வருகின்றன. இன்னும் சிலரது புத்தகங்கள் நாளை வரவிருக்கின்றன. இது வரை உங்களுக்கு மருந்து வகைகள் வந்து சேரவில்லை என்றால், உங்களுக்கு மருந்துகள் கொண்டு வந்து தரப்படும் வரை சற்று பொறுமை காக்கவும். விரைவில் அவை உங்களை வந்தடைய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மிக அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டும் உங்களது DO வையோ, வைத்தியசாலையையோ தொடர்பு கொள்ளலாம்.

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter