அக்குறணையின் தற்போதைய நிலவரம் பற்றிய அறிவித்தல்

அன்புள்ள அக்குரணை வாழ் பொது மக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..

தற்போதைய நிலவரம் பற்றி ஒரு முக்கிய அறிவித்தல்!

ஏப்ரல் மாதம் 4ம் திகதி, அக்குறணையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்ததே. அந்த வகையில், இதுவரை அக்குறணையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் ஊர்மக்கள் Quarantine (தனிமைப்படுத்தி அவதானித்தல்) செயற்பாட்டிற்காக வேறு பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்படுவது தண்டனை வழங்குவதற்காக அல்ல. மாறாக, கொரோனா நோய் சம்பந்தமான ஏதாவது அறிகுறிகள் அவர்களுக்கு எதிர்வரும் இரண்டு கிழமைகளுக்குள் ஏற்படுகின்றனவா என அவதானிக்கப்படுவார்கள். அவ்வாறு அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் கொரோனா பரிசோதனை அவர்களுக்கு செய்யப்பட்டு கொரோனா பரிசோதனை முடிவுக்கு ஏற்ப அவர்கள் வைத்தியசாலைக்கோ அல்லது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இரண்டு கிழமைகளில் அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என்றால் அவர்கள் முறைப்படி அறிவுரைகள் வழங்கப்பட்டு அதன் பின்னர் வீட்டுக்கு சென்று குறிப்பிட்ட காலத்துக்கு வீட்டிலேயே தனிமைப்பட்டு இருப்பதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்த மக்கள் quarantine இல் இருக்கும் போது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இஸ்லாமிய முறைப்படி அரசாங்கத்தால் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும். ஆகவே யாரும் வீணாக பயப்படவோ, பொய் வதந்திகளை பரப்பவோ வேண்டாம்.

அவ்வாறே,
இந்த முக்கியமான காலப்பகுதியில் ஊரில் இருக்கும் நீங்கள் அனைவரும் எந்தக் காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வீடுகளில் இருக்கும் போது அடிக்கடி முறைப்படி கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி இருப்பவர்கள் தம்மை வீட்டிற்குள்ளும் ஏனையவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

அதி தீவிர மருத்துவ பிரச்சினைகளின் போது Army, Police அல்லது 1990 Ambulance சேவை இனை வீட்டிலிருந்தவாறே தொடர்பு கொள்ள முடியும்.

கொரோனா நோயாளிகளுடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ தொடர்புபட்ட இன்னும் யாரேனும் இருப்பீர்கள் என்றால் MOH அல்லது PHI அவர்களை உடனடியாக தொடர்புகொண்டு உண்மையான தகவல்களை வழங்கவும். இது உங்களதும், குடும்பத்தினரும், நாட்டிலுள்ள அனைவரினதும் நலனுக்காகவே கேட்கப்படுகின்றது.

யாரேனும் ஒருவர் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததை மறைத்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாக மாறும்.

தொடர்புகளுக்கு:
MOH காரியாலயம் 0662244054
MOH Dr Sanjeewa 0770843621
PHI அதிகாரிகள்
0719407545
0718071883

பொது வழிகாட்டல்கள்
சகோ. ஹகீம் 0777841703
மௌலவி அஜ்மல் 0777785079

இந்த சந்தர்ப்பத்தில் எம்மோடு கை கோர்த்து ஊருக்கும், நாட்டுக்கும் உதவி செய்த நல்ல பிரஜைகளாக இருப்பீர்கள் என நம்புகிறோம்.

இப்படிக்கு,
அக்குறணை சுகாதார குழு
அக்குரணை ஜம்இய்யத்துல் உலமா
அக்குரணை பள்ளிகள் சம்மேளனம்

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter