வாய் திறக்க முடியாமல் – நடுத்தர சமூகம்

Jasoor – for AkuranaToday

அஸ்ஸலாமு அலைக்கும்

அக்குரனையில் பல இடங்களில், மக்களுக்கு உதவுவதற்காக சில தனவந்தர்கள் தனிப்பட்ட ரீதியிலும், பள்ளிகளுக்கும், பொது நிறுவங்களுக்கும் தமது செல்வங்களை / பணங்களை கொடுகின்றார்கள். பாராட்டதக்கது.

இருப்பினும் இவ்வுதவி சகலருக்கும் போகாத நிலைமை ஒன்று காணப்படுகின்றது.
சமூக மட்டத்தில்

  1. வசதி படைத்தவர்கள்
  2. நடுத்தர வர்க்கத்தினர்
  3. ஏழைகள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளனர்

இதில் வசதி படைத்தவர்கள் நிலைமை இப்பொது அவர்களுக்கு பிரச்சினைகள் அவ்வளவாக இல்லை, ஆவர்களில் பலரே சமூகத்திற்கு உதவிகளை வழங்கி கொண்டு இருக்கி்ன்றார்கள், அல்லாஹ் அவர்களுக்கு மேலும் பரகத்திணை கொடுக்க வேண்டும்

ஏழைகள் – அதாவது முதல் பார்வையில் அல்லது அவர்களது நிலைமை வெளிப்படையாக சமூகத்திகற்கு தெரியக்கூடியதாய் இருப்பவர்கள். இவர்களுக்கு அதிகமான உதவிகள் போகின்றன, இதில் எந்த பிரச்சினையும் இல்லை அல்லாஹ் கொடுக்க கூடியதை தடுக்க யாரும் இல்லை. அவர்களுக்கு அதிகம் உதவிகள் கிடைப்பதில் எந்த பிரச்சினைகளும் இல்லை. இவர்களுக்கு உதவி தேவைப்படும் போது இவர்கள் தயக்கமில்லாமல் மற்றவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கத்தில் உள்ள பார்ப்பதற்கு இவர்களுக்கு பிரச்சினைகள் இருக்காது என்று நினைக்கும் பலர் சமூகத்தி இருகின்றனர், இவர்கள் ஒரு நாளும் மற்றவர்களிடம், ஏன் தனது உடன் பிறந்தவர்களிடம் கூட உதவிகள் கேட்க தயங்குவார்கள். இவர்களை அடையாளம் கண்டுகொள்வது சிறிது சிரமம் என்றாலும் இவர்களுக்கு தற்போது செய்யகூடிய உதவியே மிக முக்கியமானது. இப்படியான பலருக்கு சிறந்த வீடுகள் , வாகனங்கள் கூட இருக்கலாம்.

மற்றவர்களிடம் உதவி கேட்க முடியாமல் தவிர்க்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோருக்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் போன் செய்து உதவிகளை செய்யுங்கள் ( ஏதேனும் உதவிகள் தேவையா? என்று கேட்காதீர்கள்) , அவர்களது பதிலில் உங்களுக்கு விளங்கும் அவர்களது நிலைமை. அதே வேலை உதவி பெறுபவர்கள் உதவி செய்பவர்களை பார்த்து கூனிக்குறுக தேவை இல்லை, அல்லாஹ் கொடுத்த செல்வத்தில் தான் அவர்கள் உங்களுக்கு தருகின்றார்கள்.

கொடுப்பவருக்கு தர்ம சங்கடமாக இருந்தால் அவர்களுக்கு தெரியாமல் அவர்களது வீட்டுக்கு பொருட்களை அனுப்பி விடுங்கள். அல்லது கூடுதலாக பொருட்கள் இருக்கிறது என்று கூறி அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

ஏழைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்து தேவையானவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மன நிலைக்கு தனவந்தர்கள், கொடையாளிகள், மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மாற வேண்டும்.

பள்ளி மஹல்லா மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நிலை வந்தால், சந்தாகார்களுக்கு மட்டும் பார்க்காமல் அதே ஊரில் உள்ள மாற்று மதத்தவர்கள், வாடகைக்கு வந்து குடி இருப்பவர்கள் என்போரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பள்ளிவாயில் (மஹல்லா) அல்லது ஊரில் உள்ள ஒரு முக்கிய நிறுவனத்தினூடாக பொருட்கள் பகிர்வதாயின், அங்குள்ள தனவந்தர்களை தவிர மற்றைய அனைவருக்கும் பொருட்கள் சென்றடையுமாறு செய்தால் அதில் நடுத்தர வர்க்கத்தில் உள்ள வெளியே வசதிபடைத்தவர் போல் இருந்தாலும் வாய் திறந்து கேட்க முடியாத பலருக்கும் நன்மையாக அமையும்.

அல்லாஹ் இந்த இக்கட்டான நிலைமையில் இருந்து எம்மை விரைவில் வெளியேற்றவேண்டும் என்று துஆ செய்து கொள்வோம்.

நன்றி வஸ்ஸலாம்

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter