அக்குறணை பிர.செயலகத்தின் சில முக்கிய முடிவுகள்

இன்று 24/03/2020 செவ்வாய்க்கிழமை காலை அக்குறணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் பெறப்பட்ட சில முக்கிய முடிவுகள்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சமயம் அக்குறணை நகரின் pharmacy கள் இரண்டினை திறப்பற்கு அனுமதி வழங்கப்பட்டது.

திறக்கப்படும் Pharmacy களின் தொலைபேசி இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும், மருந்துகள் தேவைப்படுகின்றவர்கள் தொலைபேசி மூலம் தேவையான மருந்துகளை Order செய்து மருந்துகளை Pharmacy ளுக்கு அனுமதிக்கபட்ட வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே அனுப்பக்கூடிய ஒரு ஏற்பாட்டினை செய்வதாக முடிவுசெய்யப்பட்டு Akurana Pharmacy Association யை தொடர்புகொண்டு இத்திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொதுமக்கள் அதிகம் பஸாரிற்கு வருவதை குறைக்கும் நோக்கில் ஊரடங்கு அமுலில் இருக்கும் போது சில்லரைக்கடைகள் மூலம் உலர் உணவுப்பொருடகளை பொதி செய்து வாகனங்கள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி மக்களுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியினை வழங்க முடியும் என பொலிஸ் OIC தெரிவித்தார்.

ஊரடங்கு அமுலில் இருக்கும் போது Shoppingo போன்ற Home Delivery செய்யும் நபர்களில் ஐவருக்கு பொலிஸ் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பேக்கரி தயாரிப்புக்களை ஊரடங்கு அமுலில் இருக்கும் போது தயாரிப்பதற்கும் அவற்றை வாகனம் மூலம் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதற்கும் பொலிஸார் அனுமதி வழங்க முன்வந்தனர். (இது தொடர்பில் பேக்கரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.)

திங்கட்கிழமை பஸாரிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்களை முறைப்படுத்துவதற்கு அக்குறணை வர்த்தக சங்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட தொண்டர் குழு மிகச்சிறப்பாக செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன், அதனை ஏற்பாடு செய்த அக்குறணை வர்த்தக சங்கத்திற்கு அனைத்து அதிகாரிகள் மூலம் விஷேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் வியாழக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் இதே போன்றதொரு ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக பொலிஸ் OIC தெரிவித்தார்.

திங்களன்று அக்குறணை பஸாரில் மரக்கறி மற்றும் சில்லரை பொருட்கள் ஒரு சில கடைகளில் அதிக விலை விற்கப்பட்டதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமை இது போன்று அதிக விலை விற்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அவசர மருத்துவ தேவைகள் ஏற்பட்டால் அக்குறணை பிரதேச சபை தவிசாளரை தொடர்பு கொண்டு வாகன உதவிகள் மற்றும் பொலிஸ் அனுமதிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும் என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார் தெரிவிக்கப்பட்டது.

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter